கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவி அடித்து கொலை... அ.தி.மு.க. பேரூராட்சி தலைவர் கைது
தேனி : கர்ப்பிணி என்றம் பாராமல் தனது மனைவியை அடித்து கொலை செய்த அ.தி.மு.க. பேரூராட்சி தலைவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட மணலாறு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் பேரூராட்சி தலைவராக உள்ளார். இவருக்கும் ஆண்டிபட்டியைச் சேர்ந்த கற்பகவல்லி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கற்பகவல்லி மீண்டும் கர்ப்பமானார்.

சுரேஷ் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஊர் பெரியவர்களுக்கு தெரிய வந்ததையடுத்து, அவர்கள் பேசி சமாதானம் செய்து வைத்தனர்.
இருப்பினும் கணவன் மனைவி இடையே தகராறு நீடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று (வியாழக்கிமை) இரவும் இருவருக்கும் தகராறு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது கற்பகவல்லி கீழே விழுந்ததாக தேனி அரசு மருத்துவமனை கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கர்பமாக இருந்த கற்பகவல்லி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை நல்லதம்பி சின்னமனூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்ற நிலையில், சுரேஷிடம் போலீசாரும் விசாரணை நடத்தினர். அப்போது அவர், இருவருக்கும் தகராறு நடந்தபோது கற்பகவல்லி தாலிக்கொடியை நெருக்கியதாகவும், கீழே விழுந்த மனைவியின் வயிற்றில் ஓங்கி உதைத்ததில் அவர் மயக்கமடைந்தார் என்பதால் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, உத்தமபாளையம் நீதிமன்றத்தில் சுரேஷை ஆஜர்படுத்தினர். 90 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, மதுரை மத்திய சிறையில் சுரேஷ் அடைக்கப்பட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications