For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு: தமிழக முதல்வர் ஓ.பியின் பெங்களூர் பயணம் திடீர் ரத்து

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சிறையிலுள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்க பெங்களூர் வர இருந்த தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், திடீரென பயணத்தை ரத்து செய்தார்.

Panneer selvam cancel his visit to Bangalore

சிறையிலுள்ள ஜெயலலிதாவை சந்திக்க நேற்றுமுன்தினம், பன்னீர் செல்வம் தலைமையில் மூத்த அமைச்சர்கள் பெங்களூர் வந்தனர். நேற்று மாலை வரை பெங்களூரிலுள்ள ஹோட்டலில் தங்கியிருந்த அந்த குழுவை சந்திக்க, ஜெயலலிதா அனுமதியளிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து நேற்றிரவு, பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் சென்னைக்கு திரும்பினார்.

இந்நிலையில், இன்று ஹைகோர்ட் நீதிபதி, ஜாமீன் அளித்துவிடுவார் என்று நினைத்து ஜெயலலிதாவை சந்திக்க பன்னீர்செல்வம் பெங்களூர் கிளம்ப தயாராக இருந்தார். ஆனால் ஜாமீன் விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திப்போனதால், தனது விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டார் பன்னீர்செல்வம்.

English summary
Tamilnadu chief minister Panneer selvam cancel his visit to Bangalore prison where Jayalalitha has been lodged.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X