சசி முதல்வரானால் ஓபிஎஸ்ஸை டம்மியாக்க சசி தரப்பு பக்கா ப்ளான்!
சசிகலா முதல்வராகிவிடுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறது மன்னார்குடி கோஷ்டி. அப்படி முதல்வரானால் ஓபிஎஸ்ஸை டம்மியாக்கும் வியூகங்களையும் வகுத்து வருகின்றனர்
சென்னை: சசிகலா முதல்வரானால் ஆட்சியிலும் கட்சியிலும் ஓ. பன்னீர்செல்வம் தலையெடுக்காத வகையில் பக்கா ப்ளான் போட்டு கொண்டிருக்கிறது மன்னார்குடி தரப்பு.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மன்னார்குடி கோஷ்டியை எதிர்த்துக் கொண்டு மத்திய அரசின் ஆதரவில் முதல்வரானார் ஓ. பன்னீர்செல்வம். இதை ஏற்க முடியாமல் கொந்தளித்தது மன்னார்குடி கோஷ்டி.

ஒருவழியாக நாடகங்களை அரங்கேற்றி அதிமுக பொதுச்செயலரை கைப்பற்றிவிட்டார் சசிகலா. அடுத்ததாக முதல்வர் பதவிக்கு அடிபோட்டு வருகின்றனர்.
அப்படி சசிகலா முதல்வரானால் ஓபிஎஸ் மூலம் எந்த ஒரு குடைச்சலும் வந்துவிடக் கூடாது; இனி அதிமுகவிலும் ஓபிஎஸ் தலையெடுக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர் சசி அண்ட் கோவினர். இதற்காகவே ஓபிஎஸ்ஸை எப்படி டம்மியாக்குவது என தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இறுதியாக ஓபிஎஸ்ஸை சபாநாயகராக்கிவிட்டால் அவர் வசம் உள்ள கட்சி பொருளாளர் பதவியையும் பறித்துவிடலாம்; ஆட்சியிலும் கட்சியிலும் அவர் தலையெடுக்கவே முடியாத நிலையை உருவாக்கிவிடலாம்; தற்போதைய சபாநாயகர் தனபாலை அமைச்சராக்கிவிடலாம் என ப்ளான் போட்டு வைத்திருக்கிறார்களாம்.
மன்னார்குடியின் இந்த தூண்டிலில் ஓபிஎஸ் சிக்கினால் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என கவலைப்படுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications