சசிகலா முதல்வராக இப்போது என்ன அவசரம்.. ஓ. பன்னீர்செல்வம் ஆவேசம்
காலம் கனியும் போது சசிகலா முதல்வராக பதவி ஏற்கலாம், அதுவரை சசிகலா காத்திருப்பதில் என்ன தவறு உள்ளது என பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மக்களிடம் சசிகலாவிற்கு எதிராக அலை உள்ளது. காலம் கனியும் போது அவர் முதல்வராக பதவி ஏற்கலாம் என தாம் கூறியதாக முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ள பேட்டியில், சமீபத்தில் நடந்த இந்தியா டுடே நிகழ்ச்சியில் நானும், பொதுச் செயலாளர் சசிகலாவும் கலந்து கொண்டோம். அப்போது, நான் பேசுவதற்கு முன்பாகவே அவர் எழுந்து சென்றுவிட்டார். இதனால், அனைவரும் என்னிடம் கேள்வியெழுப்பினர். ஆனால், நான் அதற்க்கு எந்த வகையிலும் காரணமில்லை.

அதுமட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகளில் என்னை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார்கள். இந்த நிகழ்வுகள் எல்லாம் எனக்கு புரியவில்லை. நான் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் தான் இந்த பிரச்சனைகள் எல்லாம் தொடங்கியது.
ஜெயலலிதா இருந்திருந்தால் அமைச்சர்கள் முதல்வருக்கு எதிராக பேட்டி கொடுத்திருப்பார்களா? , கடந்த சில நாட்களுக்கு முன்னர், எம்.எல்.ஏ கூட்டம் நடைபெறும் போது, என்னிடம் கட்டாயப்படுத்திதான் ராஜினாமா கடிதத்தை வாங்கினர். அப்போது கூட ,அம்மாவின் சமாதி சென்றுவிட்டு வருகிறேன் எனக் கூறினேன். ஆனால் என்னை அதற்கு கூட அனுமதிக்க வில்லை.
காலம் கனியும் போது சசிகலா முதல்வராக பதவி ஏற்கலாம், அதுவரை சசிகலா காத்திருப்பதில் என்ன தவறு உள்ளது. 4 வருடம் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் சசிகலாவுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். ஆனால், மக்களை சந்தித்துதான் வாக்கு கேட்க வேண்டும் என அவர்கள் நினைவுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications