பண்ருட்டியாரை விரட்டியடித்துள்ளனர்.. சொல்கிறார் சேந்தமங்கலம் சாந்தி

சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து அதிமுக அரசுக்கு ஆதரவு தெரிவித்து தேமுதிக அதிருப்தியாளராக மாறியவர் சாந்தி.
இவர் பண்ருட்டி ராமச்சந்திரன் விலகல் குறித்து கருத்து தெரிவிக்கையில், தேமுதிகவின் கூடாரம் இனி காலியாகும். கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இன்னும் வெளியேறுவார்கள்.
தேமுகவில் யாருக்கும் மரியாதை இல்லை. அந்தக் கட்சியில் ஜனநாயகம் இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியில் இருந்து விலகுவார் என நாங்கள் எதிர்பார்த்ததுதான். கட்சியின் மூத்த தலைவரான அவரது பேச்சைக் கட்சியில் யாரும் மதிப்பதில்லை. அவர் கட்சியில் புறக்கணிக்கப்பட்டார்.
ஐ.நா. சபையில் பேசும் அளவுக்குத் தகுதியுடைய பண்ருட்டி ராமசந்திரன் நல்ல தலைவர். மனம் நொந்து வெளியே வந்திருக்கார் என்றால், இது அவராக எடுத்த முடிவாக இருக்காது. அவர் விரட்டியடிக்கப்பட்டுதான் வெளியே வந்துள்ளார்.
இனி எப்படி தேமுதிக வளர்ச்சியடையும் என எண்ணிப் பார்க்க வேண்டும். இனி அந்தக் கட்சி வளர்ச்சியடையாது. உழைப்பவர்களுக்கு அங்கு மரியாதை இல்லை. குறிப்பாக, சொல்ல வேண்டுமென்றால், அந்தக் கட்சியில் உள்ள மூவர் அணிதான் கட்சியைச் சீரழிக்கிறது. அவர்களால்தான் 7 எம்எல்ஏ-க்கள் வெளியேறினர். இப்போது பண்ருட்டி ராமச்சந்திரனும் வெளியேறியுள்ளார். அவர் நல்ல நேரத்தில் நல்ல முடிவை எடுத்துள்ளார் என்றார் சாந்தி.
இவர் மூவர் அணி என்று யாரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ் ஆகியோரைத்தான் சொல்கிறார் என்று கூறப்படுகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications