பைக் வாங்கித் தர மறுத்த பெற்றோர்.. தூக்கில் தொங்கிய மகன்!
புதுச்சேரி: புதுச்சேரியில் பெற்றோர் புது பைக் வாங்கி தராததால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள மடுகரை ராம்ஜி நகர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன் (52). இவர் புதுவை அகில இந்திய வானொலியில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரசன்னா குமார்(20) சூரமங்கத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில் பிரசன்னா தனது பெற்றோரிடம் தனக்கு பைக் வாங்கித் தரவேண்டும் என்று கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரது பெற்றோர் பைக் வாங்கித் தரவில்லையாம். நேற்று முன்தினம் இது தொடர்பாக பிரசன்னா குமாருக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் விரக்தியடைந்த பிரசன்னா குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை கைப்பற்றி, பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications