காரைக்குடி பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள இராம. சு. இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர் நிலைப் பள்ளியில் நடந்த பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தில் முதல் பருவத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியருக்கு பேட்ஜ் அணிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராம.சு. இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருமதி. சுகுணா தலைமையில் நேற்று நடைபெற்றது. தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார்.

கூட்ட்தில் முதல் பருவத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு (PADGE) பேட்ஜ் அணிவிக்கப்பட்டது. முதல் பருவத்தில் மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பெற்றோர்களிடம் மாணவர்களின் கல்வி தர அட்டைகள் காண்பிக்கப்பட்டு கையொப்பம் பெறப்பட்டது. இரண்டாம் பருவத்தில் மாணவர்களை களப்பயணம் அழைத்து செல்லுதல், எழுத்து பயிற்சி அளித்தல் போன்ற பள்ளியில் செயலபடுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.

பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் திருமதி.சித்ரா நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர்கள் திருமதி.விஜயலெட்சுமி, கோமதி ஆகியோர் செய்திருந்தனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications