எங்கே போகிறது ஜாதி வெறி? பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு எதிராக நடக்கும் சதியை பாருங்க
Recommended Video

சென்னை: ஜாதி ஆதிக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டும், 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தை காணவிடாமல் சதி நடப்பதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இயக்குநர், பா.ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் பரியேறும் பெருமாள். தூத்துக்குடி மாவட்டம் கதைக்களம். ஜாதிய ஏற்றத்தாழ்வு கொடுமையை நுணுக்கமாக இப்படம் காண்பித்துள்ளது.

இதன் காரணமாக போதிய திரையரங்குகளை ஒதுக்காமல் ஓர வஞ்சனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கும் மக்களை வர விடாமல் சதி நடப்பதாக நெட்டிசன்கள் குமுறுகிறார்கள்.
When people asking to increase the screen for #PariyerumPerumal, But the actual facts is different. Gowsi Shankar on her post.
— Lavanya Natarajan (@am_Lavu) September 30, 2018
Persecution in #Cinemaindustry@TChemmel @input_ns7tamil @beemji @Director_Ram pic.twitter.com/e9SCluPqni
கவுசி சங்கரின் இந்த பேஸ்புக் பதிவை பாருங்கள். பரியேறும் பெருமாள் படத்திற்கு டிக்கெட் புக் செய்ய முயன்றபோது கோவையில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றும், பொள்ளாச்சியில் 15 இருக்கைகளே இருந்தது போல காட்டியதாகவும். ஆனால் நேரில் போனால் இருக்கைகள் காலியாக இருந்ததாகவும் பதிவிட்டுள்ளார். அதாவது, ஆன்லைனில் வேண்டுமென்றே டிக்கெட் இல்லை என்பது போல காண்பிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
Even i faced same kind of issue. I am not able to book online, but i can get the ticket in counters. I thought ita technical glitch, but i dont think so if its happeneing spmewhere else too
— எமதாயி னுமது (@tamillnataraj) September 30, 2018
இதே கருத்தை ட்விட்டரில் இந்த நெட்டிசனும் கூறியுள்ளார். டெக்னிக்கல் பிரச்சினை என்றுதான் நினைத்தோம். ஆனால், பின்னணி வேறு என்கிறார் இவர்.
பரியேறும் பெருமாள் திரைப்படம் ஜாதிய ஏற்றத்தாழ்வை சித்தரிக்கிறதே தவிர, எந்த ஒரு ஜாதியையும் இழிவுபடுத்தும் வகையில் இல்லை. ஆனாலும் கூட, ஒடுக்கப்பட்டவர்களின் குரல் வெளியே வந்துவிட கூடாது என்பதில் லாபி செயல்படுவதை இந்த சம்பவங்கள் அம்பலப்படுத்துகின்றன.












Click it and Unblock the Notifications