விஜயகாந்த் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது: தேமுதிக எம்.எல்.ஏ பார்த்தசாரதி
சென்னை: விஜயகாந்த் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது என்று தேமுதிக எம்.எல்.ஏவும், விஜயகாந்த்தின் விசுவாசியுமான பார்த்தசாரதி தெரிவித்தார்.
சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தின் வெளியே நிருபர்களுக்கு பேட்டியளித்தார் பார்த்தசாரதி. அவர் கூறியதாவது: அமைச்சர் பதவி கொடுப்பதாக கூறி தேமுதிகவினர் இழுக்கப்பட்டுள்ளனர். பதவிக்கு ஆசைப்பட்டுதான், சந்திரகுமார் உள்ளிட்டோர் கட்சிக்கு எதிராக கலம் செய்துள்ளனர்.

கூட்டணி பற்றி விஜயகாந்த் அனைத்து நிர்வாகிகளோடும் ஆலோசனை நடத்திதான் முடிவை அறிவித்தார். அவராக எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதேநேரம், சந்திரகுமார் சொல்பவர்களுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும் என்ற அவசியம் விஜயகாந்துக்கு கிடையாது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் எடுக்கும் முடிவுக்கு கட்சியினர் கட்டுப்பட்டேயாக வேண்டும்.
இப்போது அவர் போக விரும்பும் கட்சியில் மட்டும் சந்திரகுமாருக்கு தலைவர் பதவியா கிடைத்துவிட போகிறது. ஆம்பிள்ளை என்றால், இருக்கும் இடத்தில் இருந்தே வெற்றிக்காக உழைக்க வேண்டும். சந்திரகுமார் மட்டுமல்ல கட்சியிலுள்ள எல்லோரும் கட்சிக்காக உழைத்துள்ளோம்.
தேமுதிகவை அழிக்க முயற்சி செய்வோர், அழிந்துபோவார்கள். விஜயகாந்த் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு பார்த்தசாரதி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
