கணவரை வெளுத்த மனைவி... பாய்ந்த கொழுந்தியாள்.. சரமாரி கெட்டவார்த்தை... அடிக்கப் போன ஆவேச குஷ்பு!!

சன்டிவியில் குஷ்பு நடத்தும் நிஜங்கள் நிகழ்ச்சி பெரிய பஞ்சாயத்தை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர் தகாத வார்த்தைகளை பேசியதால் அவரை பிடித்து கீழே தள்ளிவிட்டார் குஷ்பு.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொலைக்காட்சிகளில் இப்போது குடும்ப பஞ்சாயத்துகள் பேசப்படுகின்றன. விஜய் டிவியில் லட்சுமி ஆரம்பித்து வைத்த இந்த பஞ்சாயத்து ஜீ தமிழில் நிர்மலா பெரியசாமி, லட்சுமி ராமகிருஷ்ணன், சுதா சந்திரன் தொடர்ந்து இப்போது சன்டிவியில் குஷ்புவிடம் வந்து நிற்கிறது.

கடந்த ஒரு மாதகாலமாக குஷ்பு நிஜங்கள் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தம்பதியரின் பிரச்சினைகளுக்கு தகுந்த நிபுணர்களும் ஆலோசனை வழங்குகின்றனர். நிகழ்ச்சியில் அவ்வப்போது கண்ணீர் காட்சிகளும் இடம் பெறுகின்றன.

நிகழ்ச்சியின் டிஆர்பியை உயர்த்த ஏழைகளின் கண்ணீர் காசாக்கப்படுகிறது என்று இந்த நிகழ்ச்சியைப் பற்றி பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

குடும்ப பஞ்சாயத்து

இன்று நாகராஜன் முத்துமாரி தம்பதியர் குஷ்புவிடம் பஞ்சாயத்து செய்ய வந்தனர். முத்துமாரியும் நாகராஜனும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வதால் வந்தது பஞ்சாயத்து. நாகராஜன் உடன் அவரது குடும்பத்தினரும், முத்துமாரி உடன் அவரது குடும்பத்தினரும் பங்கேற்று மாறி மாறி திட்டிக்கொண்டனர். பேசிக்கொண்டிருந்த போதே முத்துமாரியின் சகோதரியை திட்டினார் நாகராஜன் அப்போது சகோதரிகள் இருவரும் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்குச் சென்றனர்.

பிடித்து தள்ளிய குஷ்பு

பிடித்து தள்ளிய குஷ்பு

கணவர் நாகரஜன் தொடர்ந்து திட்டவே, மனைவி முத்துமாரி திடீரென பாய்ந்து அடித்ததார். நிகழ்ச்சி களேபரமானது. இதை செட்டில் இருந்தவர்களும் பார்த்தனர்.

திடீரென முத்துமாரியின் சகோதரியை தகாத வார்த்தையால் குஷ்பு முன்னிலையில் பேசினார் நாகராஜன். குஷ்பு பாய்ந்து வந்து நாகராஜனின் சட்டையை பிடித்து கிழே தள்ளினார். கெட்டவார்த்தையில் திட்டிய நாகராஜனுக்கு மீண்டும் தர்ம அடி விழுந்தது. ஒரு பிரேக் விட்டார் குஷ்பு.

முடிந்த பஞ்சாயத்து

முடிந்த பஞ்சாயத்து

விளம்பர இடைவேளைக்குப் பின்னர் குஷ்பு மீண்டும் பஞ்சாயத்து செய்தார். என் முன்னாடியே இப்படி கெட்ட வார்த்தை பேசலாமா? எனக்கு என்ன மரியாதை இருக்கு என்று கேட்டதற்கு நாகராஜன் மன்னிப்பு கேட்டார். அப்புறம் முத்துமாரியும், நாகராஜனும் ஒருவருடம் பிரிந்து இருங்கள் என்றும் குழந்தை முன்னிலையில் சண்டை போடவேண்டாம் என்றும் பஞ்சாயத்தை முடித்தார் குஷ்பு.

எங்கே போய் முடியுமோ?

எங்கே போய் முடியுமோ?

கடந்த வாரம் ஒருவரைப் பார்த்து ஆம்பளையா நீ என்று கேட்டார் குஷ்பு. பங்கேற்பாளர்களை ஒருமையில் பேசுவதும், திட்டுவதுமாக குஷ்பு நிகழ்ச்சி நடத்தி வருகிறார். குடும்ப பஞ்சாயத்து செய்ய குஷ்புவிடம் வந்து கடைசியில் நிகழ்ச்சியே பெரும் பஞ்சாயத்தாக போய்கொண்டிருக்கிறது. இது எங்கே போய் முடியுமோ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+