சொன்ன இடத்தில் பஸ்சை நிறுத்தாத கண்டக்டர்.. கழுத்தை அறுத்த பயணி.. ஊத்துக்கோட்டையில் விபரீதம்
திருவள்ளூர்: விரும்பிய இடத்தில் பஸ்சை நிறுத்தாத நடத்துநரை பயணி ஒருவர் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், புத்தூரிலிருந்து, சென்னை கோயம்பேட்டுக்கு வந்த அரசு பஸ்சில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த பஸ்சின் நடத்துனராக, திருத்தணி அருகே உள்ள செறுக்கலூர் கிராமத்தை சேர்ந்த செல்வம் ( 46) பணியில் இருந்துள்ளார்.

நடத்துநரின் ஊரை சேர்ந்த மாற்றுத் திறனாளி தாமோதரன் மற்றும் அவரது மனைவி இருவரும் அந்த பஸ்சில் பயணித்துள்ளனர்.
தாமோதரன் மனைவி ஊத்துக்கோட்டை செக்போஸ்ட் பகுதியில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். எனவே, ஊத்துக்கோட்டை செக்போஸ்ட் அருகே பஸ் வந்ததும் தாமோதரன் வண்டியை நிறுத்த சொன்னார். அங்கு பஸ் நிறுத்தம் இல்லாததால் பஸ்சை நிறுத்த முடியாது என்று செல்வம் கூறிவிட்டார்.
இதையடுத்து பஸ் ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் வந்தடைந்தது. ஆத்திரத்தில் இருந்த தாமோதரன் அருகே உள்ள காய்கறி கடையில் கத்தியை எடுத்து வந்து டீ குடித்துக் கொண்டிருந்த செல்வத்தின் கழுத்தை அறுத்துள்ளார். படுகாயம் அடைந்த செல்வம் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்து மாற்றுத்திறனாளி தாமோதரனை கைது செய்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications