தூத்துக்குடியில் காணாமல் போன கூடங்குளம் பாதிரியார்: காவல் நிலையத்தில் புகார்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கூடங்குளம் பாதிரியார் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் வசந்தன் (40). பாதிரியார். கடந்த ஏப்ரல் மாதம் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் மறைமாவட்ட பாதிரியார்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கூடங்குளத்தில் இருந்து வசந்தன் சென்றுள்ளார். ஆனால் அவர் மீண்டும் திரும்பி வரவே இல்லையாம்.
இந்த நிலையில் காணாமல் போன வசந்தனின் சகோதரர் சுகந்தன் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. துரையிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கடந்த ஏப்ரல் மாதம் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் மறைமாவட்ட பாதிரியார்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கூடங்குளத்தில் இருந்து வசந்தன் சென்றார். ஆனால் அவர் மீண்டும் திரும்பி வரவே இல்லை. அவருக்கும் மற்ற பாதிரியார்களுக்கும் இடையே மோதல் உள்ளது. அதனால் அவரை யாராவது கடத்தி சென்று இருக்கலாம் என்ற ஐயம் நிலவுகின்றது. எனவே, அவரை உடனே மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க எஸ்.பி.துரை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கிறிஸ்தவ மக்கள் நிறைந்த பகுதியான தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிரியார் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications