ஒரு பொம்மலாட்டம் நடக்குது.. ரொம்பப் புதுமையாக இருக்குது...!
காஞ்சிபுரம்: வாழ்க்கை என்றாலே மாற்றம்தானே.. பழங்காலத் தமிழர்களின் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டமும் இதற்கு விதி விலக்கல்ல.
அன்று வந்ததும் இதே நிலா என்பது போல.. இன்றும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது பொம்மலாட்டம். ஆனால் அந்த கலைதான் சற்று மாறிப்போயுள்ளது..
வடதமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றான பொம்மலாட்டம் எப்படி மாறிப்போயிருக்கிறது பார்ப்போமா...

பாரம்பரிய கலை
தமிழகத்தின் பாரம்பரிய மிக்க கலை நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் இந்த பொம்மலாட்டம்.

நன்னெறிக் கதைகள்
கிராமப்புற மக்களுக்கு நன்னெறிக் கதைகளை எளிதாக புரியும் வகையில் பல பொம்மைகளை வைத்து நாடகம் மற்றும் நடனம் ஆடும் கலைநிகழ்ச்சியாகும். இது மக்களுக்கு பொழுதுபோக்குநிகழ்ச்சியாகவும் நல்நெறிகளை வளர்க்கும் விதமாகவும் இருந்து வந்தது.

ரசனைக்கு ஏற்றவாறு மாற்றம்
ஆனால் இன்றய காலத்திற்கு ஏற்றவாறு மாறிவரும் மக்களின் பொழுதுபோக்கு ரசனைக்கு ஏற்றவாறு போற்றத்தக்க கலைநிகழ்ச்சிகளும் மாறிக்கொண்டுதான் வருகின்றன.. பொம்மலாட்டமும் அதில் ஒன்று.

திரைக்கு முன்னால்
பொம்மலாட்டம் என்பது ஒரு கருப்பு நிற திரைக்கு முன்னால் பல வகையான பொம்மைகளை கதாப்பாத்திரங்களாக பாவித்து திரைக்கு பின்னால் உள்ளவர்கள் சொல்லும் கதைக்கு ஏற்றவாறு திரைக்கு முன் உள்ள பொம்மைகளை ஆடசெய்வர்.

மக்களுக்குப்புரியும் வகையில்
இக்கதைகள் ராமாயனம்,மகாபாரதம்,பகவத்கீதை போன்ற நல்நெறிகதைகளை மக்களுக்கு எளிதில் புரிவிக்கும் வண்ணம் இருக்கும்.

கோவில் விழாக்களில்
பொம்மலாட்டம் முக்கியமாக கோயில் திருவிழாக்களில் இரவு முதல் அதிகாலை வரை நடக்கும்.

அரசின் திட்டங்களையும் சொன்னார்கள்
காலப்போக்கில் புராணக் கதைகளை மட்டுமல்லாமல்,அரசின் நலத் திட்டங்களையும் கூட இந்தக் கதைகளில் புகுத்தினர்.

ஊடுறுவிய சினிமாப் பாட்டுக்கள்
இன்று இந்தக் கலை வேறு மார்க்கத்தில் பயணிக்க ஆரம்பித்து விட்டது. அதாவது சினிமாவின் தாக்கம் அதிகரித்து விட்டது.

சினிமாப் பாட்டுக்கு ஆட்டம்
மக்களின் பொழுதுபோக்கு ரசனைகளுக்கு ஏற்றவாறு சின்மாவில் வரும் பாடல்களுக்கு ஏற்றவாறு பொம்மைகளை வைத்து நடனம் ஆடசெய்யும் நிலைமை உருவாகி உள்ளது கோயில் திருவிழாக்களில். காஞ்சிபுரம் பகுதியில் ஒரு கோவிலில் இப்படி சினிமாத்தனமான ஒரு பொம்மலாட்டத்தைக் காண முடிந்தது.. மனதி்ல் வருத்தம்தான் வந்தது.

பாரம்பரியத்தைக் காப்போம்
பாரம்பரியமிக்க ககலைநிகழ்ச்சிகள் கொண்டுவரப்பட்ட நோக்கத்தையும், அந்த கலையின் கலாச்சாரத்தையும் அழித்துவிடாமல் பொம்மலாட்ட கலைநிகழ்ச்சியாளர்களும் மறறும் மக்களும் தமிழகஅரசும் ஏதாவது நடைவடிக்கை மேற்க்கொண்டால் மட்டுமே பாரம்பரியமிக்க இந்தக் கலையைக் காக்க முடியும்..
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications