பட்டா மாறுதல்.. சொத்து மாற்றம்! ஒரே நாளில் திணறடித்த தாலுகா ஆபீஸ் தாசில்தார், திருச்சி பில் கலெக்டர்
மயிலாடுதுறை: பட்டா மாறுதல் செய்ய வேண்டுமானால் ஆன்லைனிலேயே அனைத்து வசதிகளையும் பதிவுத்துறை, வருவாய்த்துறை செய்து தந்திருக்கிறது.. ஆனாலும், தங்களது விண்ணப்பங்கள் தொடர்பாக நேரடியாக , அதிகாரிகளை சென்று சந்தித்து, அழுத்தம் தரவேண்டிய நிலைமையும் சிலருக்கு உள்ளது.. அந்தவகையில், சீர்காழி தாலுகா ஆபீசுக்கு ஒருவர் சென்றுள்ளார்.. அவருக்கு என்ன நடந்தது தெரியுமா?
நிலத்தை அளக்க வேண்டும் என்றும், சாதி சான்றிதழ் தேவை என்றும், பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்றும் உதவித்தொகையை பெற வேண்டும் என்றும், ஏராளமான விண்ணப்பங்களுடன் பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக செல்ல நேரிடுகிறது.

கோரிக்கையுடன் வரும் விண்ணப்பதாரர்களிடம், சில அதிகாரிகளும், ஊழியர்களும் நேரடியாகவே லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி அடைந்து, என்ன செய்வதென்றே தெரியாமல், நேரடியாகவே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் புகார் தருகிறார்கள்.
பெண் அதிகாரிகள் கைது
இந்த புகாரின்பேரில், நேரடி விசாரணை மேற்கொள்ளும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில், தயவுதாட்சண்யம் இல்லாமல், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகிறார்கள்.
இதற்கு அதிகாரிகள், ஊழியர்கள் மட்டுமல்ல, பெண் அதிகாரிகளும் பொதுவெளியில் சிக்கி கைதாவது பெருத்த வேதனையை தந்துவருகிறது. அந்தவகையில், நேற்று முன்தினம் ஒருவர், இன்று ஒருவர் என தினந்தோறும், லஞ்ச புகாரில் அகப்பட்டுள்ளனர்.
திருச்சி, கே.கே.நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவர், தன்னுடைய மனைவி அறிவுச்செல்வி பெயரில் உள்ள 5920 சதுரடி காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய வேண்டி விண்ணப்பித்திருந்தார்.. அத்துடன், Zone-IV பொன்மலை கோட்டம் , திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வார்டு 65-க்குரிய பில் கலெக்டர் செபாஸ்டியன் என்பவரிடமும் இதுதொடர்பாக அணுகியிருக்கிறார் சீனிவாசன்.
காலி மனைக்கு வரி நிர்ணயம்
அப்போது, பில் கலெக்டர் செபஸ்டியன், காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய வேண்டுமானால் ரூ.12,000ம் லஞ்சம் வேண்டும் என்று கேட்டாராம்.. இதற்கு சீனிவாசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.. உடனே செபஸ்டியன், ரூ.10,000ம் என்று லஞ்ச தொகையை குறைத்துக் கேட்டிருக்கிறார். ஆனால், இதற்கும் ஒப்புக் கொள்ளாத சீனிவாசன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துவிட்டார்..
அவர்களது ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய லஞ்சப்பணம் ரூ.10,000 பணத்தை, செபாஸ்டியனிடம் தந்தார் சீனிவாசன். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பில் கலெக்டர் செபாஸ்டியனை கையும் களவுமாக பிடித்தனர்.. உடனே அவரை சோதனை செய்தபோது, கணக்கில் வராத மேற்கொண்டு ரூ.24,000 இருந்ததாம்..
துணை தாசில்தார்
பிறகு திருச்சி பொன்மலை கோட்ட கார்ப்பரேஷன் அலுவலகத்திலேயே பில் கலெக்டரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம், திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல, நேற்றைய தினம் ஒரு பெண் அதிகாரி சிக்கியிருக்கிறார்.. மயிலாடுதுறை மாவட்டம், கோவில்பத்து தாடாளன் கோவில் பகுதியை சேர்ந்த அலெக்ஸாண்டர் என்பவர், தன்னுடைய தாய் பெயரில் உள்ள பட்டாவை தன் பெயருக்கு மாற்றம் செய்வதற்காக, சீர்காழி தாலுகா ஆபீசுக்கு சென்றார்..
கைதான பெண்கள்
அங்கு மண்டல துணை தாசில்தார் தேவகியை சந்தித்து மனு தந்திருக்கிறார்.. அப்போது தேவகி 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டாராம்.. உடனே அலெக்சாண்டர் மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்துவிட்டார்.. அவர்கள் அறிவுறுத்தலின்படி, பணத்தை அலெக்சாண்டர், தேவகியிடம் தந்தார்..
ஆனால், அந்த பணத்தை, நேரடியாக தேவகி வாங்காமல், தற்காலிக பணியிலிருந்த கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் டெல்பியை வாங்க சொல்லி உள்ளார்.. இதையடுத்து, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டெல்பி மற்றும் தேவகி இருவரையுமே கைது செய்துவிட்டனர்.. இப்போது இருவரிடமும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications