மதுரை மீனாட்சிக்கு கோலாகல பட்டாபிஷேகம்: இன்று திக் விஜயம்
மதுரை: மதுரையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினந்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சமேதராக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

எட்டாம் திருவிழா
சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று காலை ஊடல் லீலை நடந்தது. நேற்றிரவு 7.04க்கு மேல் 7.30 மணிக்குள் அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

மயில் வடிவ பூப்பந்தல்
இதனையொட்டி பூக்களால் அலங்கரிப்பட்ட மயில் வடிவிலான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அம்மனுக்கு கிரீடம் சாற்றி, செங்கோல் வழங்கப்பட்டது.

அம்மன் செங்கோல்
மீனாட்சி அம்மனிடமிருந்து செங்கோலை பெற்று, தக்கார் கருமுத்து கண்ணனிடம் சிவாச்சார்யார்கள் வழங்கினர். அவர் சுவாமி சந்நிதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து, மீண்டும் அம்மனிடம் செங்கோலை சமர்ப்பித்தார்.

மாசி வீதியில் அம்மன் உலா
பின் மாசி வீதிகளில் தங்க வெள்ளி சிம்மாசனத்தில் அம்மன் மற்றும் பிரியாவிடையுடன் சுவாமி வீதிவுலா வந்தனர்.

மீனாட்சி ஆட்சி
பட்டாபிஷேகம் நடைபெற்றது முதல் மதுரை நகரின் ஆட்சி பொறுப்பை மீனாட்சி அம்மன் ஏற்பதாக ஐதீகம். சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடக்கும்.

மீனாட்சி திக்விஜயம்
விழாவின் ஒன்பதாம் நாளாக இன்று(மே 9) திக் விஜயம் நடக்கிறது. மீனாட்சி அம்மன் தடாதகைப் பிராட்டியாக மதுரையில் அவதரித்து ஆட்சி புரிகையில் மேற்கொண்ட திக் விஜய புராணத்தை குறிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடக்கிறது.

வெற்றி லீலை
அம்மன் அஷ்ட திக்கு பாலர்களை எதிர்த்து வெற்றி பெற்ற லீலை நடக்கிறது. பின், வடக்கு மாசி-கிழக்கு மாசி வீதி சந்திப்பு லாலா ரெங்கசத்திரம் திருக்கண் மண்டபத்திற்கு இந்திர விமானத்தில் அம்மன் எழுந்தருளுவார்.

மீனாட்சி திருக்கல்யாணம்
விழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக கோயில் வடக்கு, மேற்கு ஆடி வீதி சந்திப்பில் மீனாட்சிக்கும், சொக்கருக்கும் திருக்கல்யாணம் சனிக்கிழமை (மே 10) காலை 10.30 மணிக்கு மேல் காலை 10.54 மணிக்குள் நடைபெறுகிறது.

பூப்பல்லக்கில் வீதி உலா
சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் காலை 11 மணிக்கு தனியார் சார்பில் திருக்கல்யாண விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இரவு ஆனந்தராயர் பூப்பல்லக்கில் அம்மன், யானை வாகனத்தில் சுவாமி வீதிவுலா வருவர்.

தேரோடும் சீரான மதுரையிலே
மே 11ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. நான்கு மாசிவீதிகளில் அசைந்து வரும் தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை வரும் அழகர்
சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா மே 14ம் தேதி நடைபெறுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications