வேப்பம்பூ மாலை சூடி... ராயர் கிரீடம் அணிந்து மதுரை பட்டத்தரசியான மீனாட்சி
மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் 8ம் நாளான நேற்று மீனாட்சி அம்மனுக்கு கோலாகலமாக பட்டாபிஷேகம் நடந்தது. இன்று திக்விஜயமும் நாளை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று, மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. இரவு 7.40 மணிக்கு அம்மன் சன்னதி ஆறுகால் மண்டபத்தில் மீனாட்சி அம்மன் மச்ச முத்திரை, ரிஷப முத்திரை, ரத்தின ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பாண்டிய மன்னர்களின் அடையாளமான வேப்பம்பூ மாலை மற்றும் ராயர் கிரீடம் அணிந்திருந்தார்.

இரவு 8 மணிக்கு கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மீனாட்சி அம்மனிடம் இருந்து ரத்தினங்கள் பதித்த செங்கோல் பெற்று, சகல விருதுகளுடன் சாமி சன்னதி 2ம் பிரகாரம் சுற்றி வந்து, மீண்டும் மீனாட்சியம்மன் திருக்கரத்தில் செங்கோலை சமர்ப்பித்தார். இதனை தொடர்ந்து நேற்று முதல் 4 மாதங்கள் மதுரையில் மீனாட்சி ஆட்சி துவங்கியது என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பின்பு வெள்ளி சிம்மாசனத்தில் பட்டாபிஷேக கோலத்தில் மீனாட்சியும், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும் மாசி வீதிகளில் வலம் வந்தனர். இன்று 9ம் நாள் விழாவாக திக்குவிஜயம் நடைபெறுகிறது. நாளை காலை 9.05 மணிக்கு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications