பழ.கருப்பையா வீடு மீது தாக்குதல்: இதுதான் அமைதிப்பூங்கா தமிழகமா? முஸ்லிம் லீக் கேள்வி
சென்னை: பழ .கருப்பையா வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த சில நாட்களுக்கு முன் பழ.கருப்பையா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அது விசயமாக நிருபர்களை சந்தித்து பேசினார். தன்னுடைய எம்.எல்.ஏ.பதவியை கூட ராஜினாமா செய்துவிட்டார். அது ஒரு கட்சியின் உள் விவகாரம். அது விசயமாக நாம் கருத்து சொல்ல விரும்பவில்லை.

ஆனால் ,நேற்று இரவு பழ.கருப்பையா இல்லத்திற்கு முன் கூடிய சில விஷமிகள், ஐயாவை தரக் குறைவாக திட்டியதோடு, அவர்கள் வீட்டின் மீதும், அங்கு நின்றுகொண்டிருந்த காரின் மீதும் கற்களாலும், கட்டைகளாலும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த வன்முறை சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
வன்முறை தாக்குதல் நடத்திய விஷமிகளை உடனடியாக தமிழக அரசு கைது செய்து தண்டிக்க வேண்டும் .சில நாட்களுக்கு முன்புதான் ஜெயலலிதா தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்று கூறினார். அது உண்மையாக இருக்குமானால் இந்த தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்வதோடு, பழ.கருப்பையா அவர்களுக்கும் ,அவர் வீட்டிற்கும் உரிய பாதுகாப்பு அழிக்க வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications