22 பேரிடம் ரூ. 2 கோடி பெற்று வேலை.. சித்தாண்டி பரபரப்பு வாக்குமூலம்.. சிக்கும் பெருந்தலைகள்?
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடு செய்தது குறித்து சித்தாண்டி பரபரப்பு வாக்குமூலத்தை போலீஸாரிடம் அளித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் 2 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணை சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட்டின் மேற்பார்வையில் நடைபெறுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் 21 பேரை கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான சென்னை போலீஸ்காரர் சித்தாண்டி சிவகங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் வேறு சிலருக்கும் இவர் டிஎன்பிஎஸ்சி வினாத்தாள்களை முன் கூட்டியே கொடுத்திருக்கிறார்.

முத்துக்குமார் கைது
மேலும் விடைத்தாள்களில் முறைகேடாக விடைகளையும் மாற்றியுள்ளார். இதில் சித்தாண்டியின் மனைவி சண்முகப்பிரியா, சித்தாண்டியின் இரு சகோதரர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் காவல் துறையைச் சேர்ந்த சிலரையும் போலீஸார் கைது செய்து வருகின்றனர். இதில் ஏற்கெனவே சென்னை ஆயுதப்படையில் வேலை பார்த்து வந்த முத்துக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூபதி
இந்த நிலையில் சித்தாண்டியை சென்னைக்கு அழைத்து வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வந்த பூபதி என்ற போலீஸ்காரரும் கைது செய்யப்பட்டார். சித்தாண்டியும் பூபதியும் இணைந்து முறைகேடாக இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து குரூப் 2ஏ மூலம் அரசு வேலையில் சேர்த்துவிட்டுள்ளனர்.

ஜெயக்குமார்
இதுகுறித்து சித்தாண்டி அளித்த வாக்குமூலத்தில், இடைத்தரகர் ஜெயக்குமார் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு ஆட்களை அரசு வேலையில் நுழைத்துவிட்டார். நான் 2 கோடி ரூபாய் பணம் வாங்கி 22 பேரை வேலையில் சேர்த்துவிட்டேன். குரூப் 4 தேர்வில் 15 பேரும், குரூப் 2 ஏ தேர்வில் 7 பேரையும் சேர்த்துவிட்டேன். நான் ஜெயக்குமாரிடம் இந்த பணத்தை எல்லாம் நேரடியாக கொடுக்கவில்லை.

போலீஸ்
முத்துக்குமாரிடம் கொடுத்து அவர் விழுப்புரம் மாவட்டம் அரியூர் விஏஓவாக உள்ள நாராயணனிடம் கொடுத்து அவர் அந்த பணத்தை ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளார். வேலை கிடைக்காவிட்டால் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவார்கள் என தெரிவித்துள்ளார். இதையடுத்து விஏஓ சக்தியை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் ஒவ்வொருவராக கைது செய்யப்படும் நிலையில் நிச்சயம் பெருந்தலைகள் சிக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!











Click it and Unblock the Notifications