தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்துள்ளது: சைலேந்திரபாபு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் முழுவதும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் இன்று நடைபெற்றது. பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு, மழை, மின் தடை உள்ளிட்ட காரணங்களால் வாக்குப்பதிவில் மந்தம் ஏற்பட்டது. சில இடங்களில் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் அமைதியாக ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார் தேர்தல் ஏடிஜிபி சைலேந்திர பாபு.
மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், "தமிழகம் முழுவதும் அமைதியாக ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. கட்சிகள் இடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதுகுளத்துாரில் ஓட்டுப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டது" என்றார்.












Click it and Unblock the Notifications