'அரசு அலுவலகங்களில் லஞ்சத்தைத் தடுக்க பேனா காமிரா'- திராவிட மக்கள் கழகம் பலே ஐடியா!
சென்னை: அரசு அலுவலகங்களில் ஊழலை ஒழித்திடவும் லஞ்சம் வாங்குவதைத் தடுத்திடவும் தமிழகம் முழுவதும் தி.ம.மு.க. தொண்டர்களுக்கு ரகசிய கண்காணிப்பு பேனா காமிரா வழங்கப்பட்டு உள்ளதாக, அதன் நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்தக் கட்சியின் துவக்கவிழா நடைபெற்றது. அப்போது கட்சியின் நிறுவனரும் தலைவருமான ஜெகநாத் மிஸ்ரா கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி, தலைமை உரையாற்றினார்.

அப்போது அவர் பேசும் போது, "தமிழகம் வளமையான நாடு. செல்வச் செழிப்பு கொண்ட தேசம். ஆனால் லஞ்சத்தாலும் ஊழலாலும் பொருளாதாரம் ஏற்றத் தாழ்வுடன் திகழ்கிறது. அதனைக் களைந்தாலே, நாடு முன்னேற்றம் கண்டுவிடும்.
எனவே முதல்கட்டமாக, தமிழகம் முழுவதும் தி.ம.மு.க.வின் ஆயிரம் தொண்டர்களுக்கு கண்காணிப்பு பேனா காமிரா வழங்கப்பட்டுள்ளது," என்றார்.

இந்தக் கட்சியின் தொண்டர்கள் மறைமுகமாக செயல்பட்டு, லஞ்சம் வாங்குவதை காமிரா பேனாவைக் கொண்டு வீடியோவாகப் படம் பிடிப்பார்கள். அதனை ஊடகங்களின் மூலமாகவும் வெளிப்படுத்துவார்கள். இதன் காரணமாக, படிப்படியாக ஊழலும் லஞ்சமும் குறையும் என்றார்.
மேலும் விவசாய மாநிலமான தமிழகத்தில், சமீபகாலமாக விவசாயம் அழிந்து வருகிறது. விவசாயிகள் பலரும் தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். காவிரி டெல்டா மாவட்டங்களில், விவசாயிகளின் போராட்டம் தொடர்கதையாகவே உள்ளது. இந்த நிலையைக் களைந்திட, விவசாயிகளின் நலனைப் பாதுகாத்திட, பாடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் உலகத் தமிழர்களின் நலனைப் பேணிக் காத்தல், அனைவருக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, கச்சத் தீவுப் பிரச்னையில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டுதல் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகளுக்காக பாடுபடப் போவதாகவும் தெரிவித்தார்.
கூட்டத்தில், தமிழகம் முழுவதிலுமிருந்து அக் கட்சியின் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications