என்ன அநியாயம்... 40 லிட்டர் பாலில் 20 லிட்டர் தண்ணீரைக் கலந்த எமகாதகர்கள்.. விரட்டிப் பிடித்த மக்கள்
கோவை: கோவை அருகே ஒரு கூட்டுறவு பால் சொசைட்டியில் அளவுக்கு அதிகமாக பாலில் தண்ணீர் கலந்ததால் மக்கள் கொதிப்படைந்து அந்த நிறுவனத்தின் பால் வண்டியை சிறை பிடித்து போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையை அடுத்த சூலூர் அருகேயுள்ள செலக்கரிச்சலில் கூட்டுறவு பால் சொசைட்டி உள்ளது. இந்த சொசைட்டிக்கு சின்னக்குயிலி, போகம்பட்டி, திம்மநாயக்கன் பாளையம், லட்சுமணநாயக்கன் பாளையம், கள்ளபாளையம், பாப்பம்பட்டி, செலக்கரிச்சல் உள்பட 12 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் பால் சப்ளை செய்கிறார்கள்.

தினமும் 5 ஆயிரம் லிட்டருக்கும் அதிகமாக பால் சப்ளை செய்யப்படுகிறது. பால் உற்பத்தியாளர்களிடம் எந்த கலப்படமும் இல்லாத வகையில் பால் வாங்கும் சொசைட்டியினர் பின்னர் பாலில் அதிக அளவில் தண்ணீர் கலப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
அதாவது 40 லிட்டர் பாலில் 20 லிட்டர் தண்ணீர் கலந்து அதனை ஆவின் நிறுவனத்துக்கு அனுப்பி வைப்பதாக பால் உற்பத்தியாளர்கள் கூறினார்கள். இந்த நிலையில் இன்று காலை பால் சொசைட்டியில் இருந்து பால் ஏற்றி வந்த வேனை பால் உற்பத்தியாளர்களும், பொதுமக்களும் சிறை பிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சூலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாலில் தண்ணீர் கலப்பதை கையும், களவுமாக பிடித்துள்ளோம். இதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் தான் இங்கிருந்து செல்வோம் என்று கூறினர்.
இந்தப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications