சென்னையை மிரட்டும் பெரு மழை.. 5 மணிக்கே இருண்டதால் மக்கள் பீதி!
சென்னையை கருமேகங்கள் சூழ்ந்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Recommended Video

சென்னை: சென்னையை கருமேகங்கள் சூழ்ந்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அதேநேரத்தில் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் பேய் மழை கொட்டி வருகிறது.
வட கிழக்கு பருவமழை தொடக்கத்திலேயே வெளுத்து வாகி வருகிறது.
சென்னையில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது.
காலை முதல் கொட்டித் தீர்த்த கனமழை பிற்பகலில் சற்று இளப்பாறியது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியுள்ளது.

5 மணிக்கே இருண்ட சென்னை
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. இதனால் சென்னை மாநகர் மாலை 5 மணிக்கே 7 மணி போல் இருண்டு போயுள்ளது.

வேகமாக வீடு திரும்புகின்றனர்
மிரட்டும் கரு மேகங்களால் மீண்டும் ஒரு பெரிய கனமழை கொட்டித் தீர்க்கும் என மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனால் அலுவலகம் சென்றுள்ளவர்கள் வேகவேகமாக வீடு திரும்பி வருகின்றனர்.

இடி மின்னலுடன் பேய் மழை
அதேநேரத்தில் புறநகர் பகுதிகளான குரோம்பேட், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் பேய் மழை கொட்டி வருகிறது. மழையால் சென்னையின் பல இடங்களில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நத்தை வேகத்தில் வாகனங்கள்
சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன. இதனால் வேலை முடிந்து வீடு திரும்புவோர் பெரும் அவதியடைந்துள்ளனர்.

மாணவர்களை அனுப்புங்கள்
மழைக் காரணமாக சென்னையில் அனைத்து பள்ளிகளும் முன்கூட்டியே வகுப்புகளை முடித்து மாணவர்களை ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வீட்டிற்கு அனுப்ப ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டிருந்தார்.

மிக கனமழை பெய்யும்
இன்று முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 9 கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications