நெல்லையில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல் ...பீதியில் பொதுமக்கள்!
நெல்லை மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நெல்லை : நெல்லை மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் பன்றிக்காயச்சால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசும் பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவருக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை அளித்துவருகிறது. ஆனாலும் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் குறைந்த பாடு இல்லை.

தமிழகம் மட்டும் இல்லாமல் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 3 பேர் உயிழந்துள்ளனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக நெல்லை சுகாதார பணிகள் துணை இயக்குனர் கூறியதாவது:
நெல்லை மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு கடந்த சில நாட்களாக சிலருக்கு ஏற்பட்டு வருகிறது. இதுவரை இந்த காய்ச்சலுக்கு 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்ப கட்டத்தில் சிகிச்சைக்கு வந்த 4 பேர் குணமாகி சென்று விட்டனர். 3 பேர் பன்றி காய்ச்சலால் நம் மாவட்டத்தில் உயிர் இழந்துள்ளனர். தற்போது நான்கு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பன்றி காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை டாக்டர்கள் ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
இந்த பன்றி காய்ச்சல் மூன்று கட்டமாக பரவுகிறது. முதல் கட்டமாக நோயாளிக்கு குறைந்த அளவில் சளி, இருமல், தொண்டை வலி இருக்கும். சிலருக்கு வாந்தி, அல்லது வயிற்று போக்கு இருக்கும். இவர்கள் 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை டாக்டர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும். குடும்ப நபர்களுக்கும் பரவாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இரண்டாவது கட்டமாக அதிக காய்ச்சல், தொண்டை வலி ஏற்படும். இதற்கு அடுத்த கட்டமாக மூச்சு விட திணறுதல், நெஞ்சு வலி, இரத்த அழுத்தம் குறைதல் போன்றவை ஏற்படும். இந்த அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications