ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவாக வெடித்த மக்கள் புரட்சி! அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு போன் போட்டு மக்கள் நெருக்கடி

பலரும் தங்களது தொகுதி எம்.எல்.ஏக்களுக்கு செல்போன்களில் கால் செய்து அழைத்து பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்த தொடங்கியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏக்களை அந்தந்த தொகுதி மக்கள் செல்போன் எஸ்.எம்.எஸ்கள் மூலம் கோரிக்கைவிடுக்க ஆரம்பித்துள்ளனர்.

எம்.எல்.ஏக்களின் செல்போன் எண்கள் சமூக வலைத்தளங்களில், வைரலாக பரவி வருகின்றன. பன்னீர் செல்வத்திற்கு மக்கள் ஆதரவு உள்ள நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டும், சசிகலாவுக்கு உள்ளது. எனவே மக்கள் தங்களது பலத்தை காட்ட ஆரம்பித்துள்ளனர்.

People asks MLAS to support O.Pannerselvam

அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ஹரி இதற்கான முன்முயற்சியை எடுத்துள்ளார். அவர் தனது டிவிட்டர் ஹேண்டிலில், அனைத்து தொகுதி அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்களையும் பகிர்ந்துள்ளார்.

இதை நெட்டிசன்கள் அதிகப்படியாக ரீடிவிட் மூலம் ஷேர் செய்து வருகிறார்கள். பலரும் தங்களது தொகுதி எம்.எல்.ஏக்களுக்கு செல்போன்களில் கால் செய்து அழைத்து பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்த தொடங்கியுள்ளனர். எம்.எல்.ஏக்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலமும் தங்கள் கோரிக்கையை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

ஆங்கிலம் தங்கள் தொகுதி எம்.எல்.ஏவுக்கு புரியாது என நினைப்போர் தமிழிலிலும் எஸ்எம்எஸ்களை டைப் செய்து அனுப்ப தொடங்கியுள்ளனர்.

தங்களது மன ஓட்டத்திற்கு எதிராக நிலைப்பாடு எடுத்தால் தேர்தலில் எதிர்த்து வாக்களிப்போம் என்ற எச்சரிக்கையை மக்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

மக்கள் புரட்சி சசிகலா கோஷ்டிக்கு எதிராக வெடிக்க தொடங்கியுள்ளதால் பன்னீர்செல்வம் தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+