குக்கருக்கு 'விசில் போடு'... தேர்தல் முடிவை கொண்டாடும் மன்னார்குடி!
ஆர்.கே நகர் தேர்தலில் தினகரன் அபார வெற்றி பெற்றதை அடுத்து மன்னார்குடியில் அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
திருவாரூர்: ஆர்.கே நகர் தேர்தலில் தினகரன் அபார வெற்றிபெற்றதை அடுத்து மன்னார்குடியில் அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு பிரச்சனைகளால் உற்சாகம் இழந்து இருந்து தினகரன் மற்றும் திவாகரன் ஆதரவாளர்கள் தற்போது மீண்டும் கொண்டாட்ட மனநிலைக்கு சென்று இருக்கின்றனர்.
ஆர்.கே நகரில் நடந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் தனியாக போட்டியிட்டு அபாரமாக வென்று இருக்கிறார். மொத்தமாக 40,707 வாக்குகள் இவர் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் இரண்டாவது இடத்தில் இருக்கும் அதிமுக வேட்பாளரை விட அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

தற்போது இதை மன்னார்குடியில் இருக்கும் சசிகலா குடும்பத்தின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். காலையில் தினகரன் முன்னிலை வகிக்க தொடங்கிய போதே இந்த கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளது.
மேலும் தினகரனின் வெற்றி குறித்து திவாகரன் பேசியதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் உற்சாக மிகுதிக்கு சென்றனர். இதையடுத்து மன்னார்குடியில் பந்தல் அடியில் தொடங்கி திவாகரனுக்கு சொந்தமான பெண்கள் கல்லூரி வரை பல்வேறு இடங்களில் வெடி வெடித்து கொண்டாடி உள்ளனர்.
மேலும் அரசு மருத்துவமனைக்கு அருகிலும் பலருக்கும் ஸ்வீட், சாக்லேட் கொடுத்து கொண்டாடி இருக்கின்றனர். தொடர் வருமான வரிசோதனையால் வாடிப்போய் இருந்த சசிகலா குடும்பத்திற்கும், மன்னார்குடியில் இருக்கும் அவரது தொண்டர்களுக்கும் இது பெரிய புத்துணர்ச்சியை கொடுத்து இருக்கிறது.
மேலும் இப்போதுதான் கொண்டாட்டம் பெரிய அளவில் தொடங்கி இருப்பதால், இன்று இரவு பெரிய அளவில் வெடிவெடித்து தெருக்களில் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications