2015 போன்ற வெள்ளம் ஏற்பட்டுவிடுமோ.. பீதியில் சென்னை மக்கள்.. மழையை சமாளிக்க முடியாத அரசால் அதிர்ச்சி
சென்னை: மழை எப்போது என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தவேளையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது.
கடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு தீவிரம் காட்டி வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் பகலிலும், இரவிலும் பெய்த மழை நேற்று இரவும் விடியவிடிய பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்தது.
பெரம்பூர் ஸ்டீபன்சன் சாலை முழுவதும் தனித்தீவு போன்று தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. பெரம்பூர், அம்பத்தூர், மாதவரம் உள்பட பெரும்பாலான சாலைகள் மழைநீரால் சூழப்பட்டு ஏரிகளாக காட்சியளித்தன.

பாலங்களில் பாதிப்பு
எதிர்பார்த்ததை போலவே வியாசர்பாடி ஜீவா, கல்யாணபுரம், பெரம்பூர் முரசொலி மாறன் சாலை சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி பெரும் அவதியை ஏற்படுத்தியுள்ளது. கொரட்டூர், வில்லிவாக்கம் அன்னை சத்யா நகர், கீழ்ப்பாக்கம், சூளை, ஓட்டேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

மீண்டும் மழை
சென்னை நகரில் நேற்று பகலில் சூரியனை பார்க்க முடிந்தது. சுள்ளென்று வெயிலும் அடித்தது. ஆனால் நேற்று இரவு முதல் பெய்யும் மழையால் மீண்டும் வெள்ளம் அதிகரித்துள்ளது. சில இடங்களில் தேங்கி நின்ற தண்ணீரை பொதுமக்களே மோட்டார்கள் மூலம் அகற்றினர். எழும்பூரில் நீரை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

ஆரம்பமே அதிர்ச்சி
ஒரு நாள் மழைக்கே சென்னை நகரில் திரும்பிய திசை எல்லாம் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளதால், வடகிழக்கு பருவமழை ஆரம்பமே மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. மக்களால் மழையை ரசிக்க முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுகக்காத அதிகாரிகள் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

எப்படி சமாளிப்பார்கள்?
மேலும் முதல் மழைக்கே இப்படி சென்னை தத்தளிக்கிறதே, வடகிழக்கு பருவமழை காலம் முழுவதையும் சென்னை எப்படி சமாளிக்க போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை நகரம் 2015ம் ஆண்டு மழை வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தது போன்று, தற்போது மீண்டும் அது போன்று நிலை ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

ரமணன் கருத்து
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் கூறுகையில், மழை எப்படி பெய்யும் என்பதை இப்போது கூற முடியாது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு நிலைகளை வைத்துதான், 2015ல் ஏற்பட்டதை போன்ற மழை, வெள்ளம் ஏற்படுமா என்பது தெரியும். எதற்கும் தயாராக இருந்துகொள்ள வேண்டும் என்றார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications