பஸ் ஸ்டிரைக்... நாய் வண்டியில் போட்டி போட்டு ஏறி பயணம் செய்த அவலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து சென்னை அரும்பாக்கத்திலிருந்து கோயம்பேடு வரை நாய் வண்டியில் மக்கள் பயணம் செய்த அவலம் நடைபெற்றது.

2.57 சதவீத ஊதிய உயர்வு, ஓய்வூதிய தொகை ஆகியவற்றை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 8 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

People in Chennai travels in Municipalities Dog van from Arumbakkam to Koyambedu

இந்நிலையில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் குறைவாக இயக்கப்படும் பேருந்துகளில் மக்கள் முண்டியடித்து கொண்டு பயணம் மேற்கொள்கின்றனர். இதுதொடர்பாக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அதில் வேலை நிறுத்தத்தை கைவிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இன்று இரவுக்குள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்படும் என்று தெரிகிறது. இதனிடையே போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் சென்னை மாநகராட்சி சார்பில் நாய் வண்டி இயக்கப்பட்டது.

சென்னை அரும்பாக்கத்திலிருந்து கோயம்பேடு வரை நாய் வண்டியில் பயணம் செய்ய மக்கள் முண்டியடித்து கொண்டு ஏறியது அதை பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As the Transport workers are in strike, to tackle the lack of buses, Chennai Corporation operates Dog van for travel. People travels in that dog van from Arumbakkam to CMBT bus terminus.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற