ஆட்டை கபளீகரம் செய்த மலைப்பாம்பு- வணங்கி காட்டுக்குள் விட்ட மக்கள்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பை வணங்கி தூக்கிச்சென்று மக்கள் காட்டுக்குள் பத்திரமாக விட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள மேடுப்பள்ளியை சேர்ந்தவர் விவசாயி முனியப்பா. இவர் நேற்று தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு ஓட்டி சென்றார்.

மேய்ந்துகொண்டிருந்த ஆடு ஒன்றின் அலறல் சத்தம் கேட்ட முனியப்பா சத்தம் வந்த திசையை நோக்கி சென்றார். அங்கு முட்புதருக்குள் இருந்த, 14 அடி நீள மலைப்பாம்பு முனியப்பாவின் ஒரு ஆட்டை பிடித்து விழுங்கி கொண்டிருந்தது.
இதை பார்த்த முனியப்பா ஆட்டை மீட்பதற்காக அங்கிருந்து ஓடிவந்து மேடுப்பள்ளி கிராம மக்களை அழைத்து கொண்டு வனப்பகுதிக்கு சென்றார். அதற்குள் ஆட்டை முழுவதும் மலைப்பாம்பு விழுங்கியது.
இதனால் பொதுமக்கள் அனைவரும் மலைப்பாம்பை வணங்கி விட்டு கெட்டூர் காப்பு காட்டிற்கு மலைப்பாம்பை தூக்கி சென்று விட்டனர். அங்கு மலைப்பாம்பு ஆட்டை வெளியே கக்கியது. மலை பகுதியில் உள்ள மக்கள் யானை,குரங்கு, மற்றும் பாம்புகளை கடவுளாக வணங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications