தொடப்ப கட்டையால அடிக்கணும்.. 2 மாத சிசுவை கொன்ற தாய்.. குமுறும் நெட்டிசன்கள்

2 மாத குழந்தையை தாய் கொன்ற விவகாரத்தில் காரணம் கண்டறிய கோரிக்கை எழுந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பெற்ற குழந்தையை கொன்றுவிட்டு கடத்தல் நாடகமாடிய தாய் கைது- வீடியோ

    சென்னை: "தொடப்ப கட்டையால அடிக்கணும்..." என்று வேளச்சேரியில் 2 மாதக்குழந்தையை கொன்ற தாயை நெட்டிசன்கள் கன்னா பின்னாவென்று தாளித்து வருகிறார்கள்.

    வேளச்சேரி தம்பதியான வெங்கண்ணா - உமா தம்பதியின் 2 மாதக் குழந்தை கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரம்தான் தமிழகம் முழுவதும் பேச்சாக இருக்கிறது. நேற்றிலிருந்து இன்னும் யாருக்கும் மனசே ஆறவில்லை.

    [ 'அதுக்கு' மறுத்த மனைவியின் தலையை துண்டித்து அருகிலேயே உறங்கிய கணவன்.. திருச்சியில் பரபரப்பு! ]

     தாயே கொலையாளி

    தாயே கொலையாளி

    2 வருஷத்துக்கு முன்புதான் இந்த தம்பதி கல்யாணம் செய்திருக்கிறார்கள். குழந்தையை காணோம் என்று நாடகமாடி, போலீசாரையே ஏமாற்றி .. கொலையாளியே பெற்ற தாய்தான் என்று தெரியவர இப்போது முகத்தை தொங்க போட்டுக் கொண்டு நிற்கிறார் உமா.

     மார்பு வலியா?

    மார்பு வலியா?

    "பால் கொடுத்தேன், மார்பு வலித்தது, அதனால் குழந்தையை கொன்றேன்" என்ற வாதத்தை விவரம் தெரியாதவர்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். "பால் கொடுக்கும்போது மார்பு அடிக்கடி வலித்தது, இதனை புருஷனிடம் சொல்லிட்டுதான் வந்தேன், ஆனால் இந்த பிரச்சனையை அவர் கண்டுக்கவே இல்லை" என்று சொல்கிறார் உமா. தான் செய்த கொலைக்கு காரணத்தையும், காரணியையும் தேட முயற்சிக்கிறார் உமா.

     பிளாஸ்டிக் பையில் குழந்தை

    பிளாஸ்டிக் பையில் குழந்தை

    ராத்திரி 2 மணிக்கு 2 மாத குழந்தையை தன்னந்தனியாக ஒரு ஏரிப்பகுதிக்கு சென்று போட்டுவர துணிச்சல் வருமா? 2 மாத குழந்தையை அதுவும் தன்னுடைய கதகதப்பில் ஒட்டிக் கொண்டு தூங்கி கொண்டிருக்கும் குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பையில் போட எந்த தாய்க்கு மனம் வரும்?

     பொம்பளையா?

    பொம்பளையா?

    குழந்தை பாக்கியம் இன்றி தவிக்கும் எத்தனையோ பேருக்கு உமாவின் இந்த செயல் வெறியை ஏற்றி இருக்கிறது. "தொடப்ப கட்டையால அடிக்கணும்... இவர் எல்லாம் ஒரு பொம்பளையா?" என்று திட்டி தீர்க்கிறார்கள். ஆனாலும் யாருக்கும் மனசு ஆறவே இல்லை... பிசைந்து கொண்டே இருக்கிறது!!

     பச்சிளம் குழந்தையின் முகம்

    பச்சிளம் குழந்தையின் முகம்

    உண்மை காரணம் கண்டறியப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. அதே நேரத்தில் உமா மனநல பாதிப்பால் குழந்தையை உமா கொன்றிருப்பார் என்றும் கூறப்படுகிறது. இதுபோன்ற மனப்பிறழ்வுகள் ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் நடக்கும் என உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். உமா, மனநலம் பாதிக்கப்பட்டாலும் சரி, அல்லது உள்நோக்கத்துடன் சுயஅறிவுடன் செய்திருந்தாலும் சரி... குழந்தையின் முகம் நம் கண்முன்னே வந்து வந்து நிற்கிறது!!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+