மக்களுக்கு தெரியும் யார் பச்சை துரோகம் செய்தது என்று.. சசிகலா மீது ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
நான் துரோகம் செய்துவிட்டதாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் வீண் பழி சுமத்துவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: துரோகம் செய்து விட்டதாகவும் சதி செய்து விட்டதாகவும் சசிகலா குடும்பத்தினர் வீண் பழி சுமத்துவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். மக்களுக்கு தெரியும் யார் பச்சை துரோகம் செய்தது என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் பச்சை துரோகம் செய்துவிட்டாதாக குற்றம்சாட்டுவது குறித்து நெறியாளர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் துரோகம் செய்து விட்டதாகவும் சதி செய்து விட்டதாகவும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தன்மீது வீண் பழி சுமத்துவதாக குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் கூறியதாவது, நான் வேண்டாம் என்று சொன்னபோது என்னை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்தீர்கள். சட்டமன்ற உறுப்பினர்களை கூப்பிட்டு நான்தான் முதல்வராக வரவேண்டும் என்று உங்களுடைய ஆதரவு வேண்டும் என்று நான் கேட்டுள்ளேனா?
அமைச்சர்களிடம் நான் கேட்டுள்ளேனா. தலைமைக் கழக நிர்வாகிகளிடம் நான் கேட்டுள்ளேனா. எந்த முயற்சியும் நான் எடுக்கவில்லையே. அப்படி இருக்கையில் நான் பச்சை துரோகம் செய்திருக்கிறேன் என்று சொல்வதற்கு என்ன காரணம்.
இதில் எது பச்சை துரோகம். மக்களுக்கு தெரியும் யார் துரோகம் செய்தது என்று. சதி செய்துவிட்டார் என்று சொல்கிறார்கள். என் அரசியல் வாழ்விற்கு வீண் பழி சுமத்துகிறார்கள். இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications