நேதாஜி குறித்த உண்மையை தெரிவிக்காவிட்டால் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம்- வைகோ எச்சரிக்கை
நெல்லை: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மாயமான சம்பவம் தொடர்பாக உண்மையான தகவல்களை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்காவிட்டால் நாடாளுமன்றத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என வைகோ தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திர போரட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 119 பிறந்தநாளை ஓட்டி பாளை ஜவஹர் மைதானத்தில் பொது கூட்டம் நடந்தது.

இது கலந்து கொண்ட மதிமுக பொது செயலாளர் வைகோ , " நமது நாட்டின் சுதந்திர போராட்ட தலைவர்களின் ஓருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உலகிலேயே சிறந்த தலைவர் ஆவார். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடியதற்காக அவர் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார்.
சுதந்திர போராட்ட காலத்தில் அவர் சென்னையில் மூன்று நாள் தங்கி அங்கு நடந்த பொது கூட்டத்தில் பேசினார். பின்னர் அவரை கைது செய்த காவல் துறை அவரை மேற்கு வங்கத்தில் சிறையில் அடைத்தது.

அங்கிருந்து அவர் தப்பி ஜெர்மன் நாட்டுக்கு சென்று ஹிட்லரை சந்தித்தார். ஹிட்லரை சந்திக்க பல தலைவர்கள் பயந்த நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஹிட்லரிடம் நீங்கள் எழுதிய புத்தகத்தில் இந்தியர்களை பற்றி தவறாக எழுதியுள்ளேர்கள், அதனை நீக்க வேண்டும் என துணிச்சலுடன் தெரிவித்தார்.
இந்திய தேசிய படைக்கு தலைமை வகித்து ஜப்பான் படையுடன் சேர்ந்து பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்தார். இதில் முதலில் அவர் வெற்றி பெற்றாலும், பின்னர் மழை, மற்றும் அமெரிக்க, ரஷ்ய நாடுகள் போரில் இறங்கியதால் அவர் தோல்வியடைந்தார்.

இதனால் ஜப்பான் பின் வாங்கியது. அப்படிப்பட்ட மகத்தான தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறந்து விட்டதாக ஜப்பானும், இந்தியாவும் அறிவித்தது. ஆனால் அவர் ரஷ்ய நாட்டின் சைபீரியா சிறையில் இருப்பதாக ரஷ்ய மற்றும் ஜெர்மன் உளவாளிகள் இந்திய தலைவர்களிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் அதை ஏற்று கொள்ளவில்லை. நேரு உள்பட பல காங்கிரஸ் தலைவர்கள் நேதாஜி தொடர்பான உண்மையான ஆவணங்களை வெளியிடவில்லை.
உலகம் சுற்றும் வாலிபரான பிரதமர் நரேந்திர மோடி விரைவில் நேதாஜி தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று காட்டத்துடன் தெரிவித்தார்.

சென்னையில்...
முன்னதாக நேதாஜி பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மூன்று நாட்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற வைகோ நேதாஜியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications