மக்கள் நலன்... கட்சி நலன் சார்ந்தது விஜயகாந்த்தின் தனித்துப் போட்டி முடிவு- ஜி.கே.வாசன்
சென்னை: தமிழகத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளது மக்கள் மற்றும் கட்சியின் நலம் சார்ந்த முடிவே என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மக்கள் நலன் சார்ந்து, தன் கட்சியின் தனிப்பட்ட நலன் சார்ந்து தனித்து போட்டி என்ற இறுதி முடிவை சட்டமன்ற தேர்தலுக்காக அறிவித்து இருக்கிறார்.

எந்த கட்சிக்கும் தன்னுடைய இயக்கம் சார்ந்த ஒரு அரசியல் முடிவினை எடுப்பதற்கு முழு அதிகாரம் உண்டு. அந்த வகையில் விஜயகாந்தின் முடிவு அமைந்து இருக்கிறது.
மேலும் மிக முக்கியமாக தேர்தல் களம் குறித்த யூகங்களும், வதந்திகளும் எப்போதும் உண்மை ஆகாது என்பதற்கு இந்த முடிவு எடுத்துக்காட்டு ஆகும். விஜயகாந்த் அணியில் சேருவீர்களா என்ற கேள்விக்கு த.மா.கவின் கூட்டணி குறித்து மார்ச் மாதம் 2 ஆவது வாரத்துக்கு பிறகு அறிவிப்பேன் என்பதை நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன். தற்போது அந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை" என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தொண்டர்கள் விரும்பும் வெற்றி கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணையும். இன்னும் ஒரு வாரத்தில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று காங்கேயத்தில் வாசன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications