2 பழைய 1000க்கு புது 2000... ஆர்வத்துடன் வாங்கிச் சென்ற மக்கள்
சென்னையில் வாங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புதிய ரூ 2,000 நோட்டை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
சென்னை: ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுக்களுக்கு நேற்று முன்தினம் இரவு மத்திய அரசு தடை விதித்தது. இதனையடுத்து இந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. எனவே மக்கள் தங்கள் அன்றாட செலவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நேற்று இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்பட்டது. நடுத்தர, ஏழை மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாக நேர்ந்தது. சிலர் அத்தியாவசிய தேவையான உணவு சாப்பிட கூட சில்லறை காசின்றி தவித்தனர். ஒருசில இடங்களில் மட்டுமே ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெறப்பட்டன. இன்று காலையில் மீண்டும் திறக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அத்தியாவசிய கூட்டம்
காலை முதல் வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணத்தை மாற்றிக் கொள்கின்றனர். பெரும்பாலான மக்கள் தங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை அதற்குரிய படிவங்களை நிரப்பி புதிய நோட்டுக்களை பெற்றுக் கொள்கின்றனர். இன்னும் சிலர் தங்களது வங்கிக் கணக்கிலேயே அதனை வைப்புத் தொகையாக வைத்துக் கொள்கின்றனர். எனவே வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. மேலும் மக்கள் கூட்டத்தை சமாளிக்க சிறப்பு கவுன்டர்களும் திறக்கப்பட்டுள்ளன.

உரிய ஆவணங்களுடன் பணம் மாற்றலாம்
சென்னையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் அந்தந்த வங்கிக் கணக்கு உள்ளவர்கள் இன்று மாலை 4 மணி வரை பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி 2000 ரூபாய் புதிய நோட்டுகளை பெறலாம். இதற்கென அனைத்து வங்கிகளிலும் விண்ணப்பங்கள் கொடுப்பட்டு வருகின்றன. அந்தந்த குறிப்பிட்ட வங்கிகளில் கணக்கு இல்லாதவர்கள் மதியத்திற்கு மேல் உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக் கொள்ளலாம் என வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.

போலீஸ் பாதுகாப்பு
பொதுமக்கள் பணம் மாற்ற வசதியாக அணைத்து வங்கிகளும் கூடுதலாக 2 மணி நேரம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணத்தை மாற்றவரும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த வங்கிகளில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியில் கூட்டம்
சென்னை ரிசர்வ் வங்கியில் பழைய 500, 1000 நோட்டுகளை கொடுத்து புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மொத்தம் 8 கவுண்டர்களில் திறக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதில் 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் புகார்
சென்னை ரிசர்வ் வங்கியில் மாலை நான்கு மணி வரை பழைய நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணியில் இருந்தே ரிசர்வ் வங்கி வாசலில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை வாங்கிச் சென்றனர். வரிசையில் வெயிலில் காத்திருப்பவர்களுக்கு பந்தல், தண்ணீர் வசதி உள்ளிட்ட எந்த வசதியும் செய்யவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாகும். எனினும் அவசர தேவைக்காக பணத்தை மாற்றியே ஆகவேண்டும் என்று வந்திருப்பதாக பலரும் தெரிவித்தனர்.

புத்தம் புது 2000 ரூபாய்
செல்லாத பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு புது 2000 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதனை ஆர்வத்துடன் மக்கள் வாங்கி அதன் வாசனையை முகர்ந்து பார்த்தனர். சிலர் புது ரூபாய் நோட்டுக்கு முத்தம் கொடுத்தனர். அதே நேரத்தில் புது 500 ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். ஒரு சில வங்கிகளில் புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுக்களையே வழங்குவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
-
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்?












Click it and Unblock the Notifications