ஜல்லிக்கட்டுக்கு தடை...மதுரையில் காலவரையற்ற உண்ணாவிரதம்: மொட்டை அடித்தும் போராட்டம் !
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி மதுரை அலங்காநல்லூரில் பொதுமக்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மொட்டை அடித்தும் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து தென் மாவட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், மாடு பிடி வீரர்களும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களும் இரவு பகலாக அதற்கான ஏற்பாடுகளை உற்சாகமாக மேற்கொண்டு வந்தனர். இதனிடையே ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையடுத்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இரண்டு இளைஞர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். உடனடியாக, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தடையை நீக்க கோரி, கடைகள் அடைப்பு, சாலைமறியல், கருப்புக்கொடி போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் மக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சாலைமறியல் போராட்டத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் முன்பு கூடிய நூற்றுக்கணக்கானோர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் தங்களை ஏமாற்றி விட்டதாகவும், இதற்கு அரசியல்வாதிகளே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதேபோல் மதுரையில் பாலமேட்டில் பொதுமக்கள் வீடுகளில் கருப்பு துணிகளை கட்டியும், மொட்டையடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரி உத்தரவின் பேரில் மதுரை மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications