அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த அதிமுக கொறடா.. கொதித்தெழுந்து தடுத்த மக்கள்!
அதிமுக எம்.எல்.ஏ. தாமரை ராஜேந்திரன் மருத்துவமனைக்கு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் மருத்துவமனை முன்பு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
அரியலூர்: அனிதா உடல் வைக்கப்பட்டுள்ள அரியலூர் மருத்துவமனைக்குள் அதிமுக கொறடா தாமரை ராஜேந்திரன் செல்லக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் அரியலூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது பிரேத பரிசோதனை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மருத்துவமனைக்குள் அதிமுக தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் செல்வதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர் உள்ளே செல்ல கூடாது என்று வலியுறுத்தி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications