ஜல்லிக்கட்டுக்கு தடை: 144 உத்தரவு; களையிழந்த மதுரை- கருப்புக்கொடி, போலீஸ் அலெர்ட்!
மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதால் மதுரை மாவட்டம் களையிழந்து காணப்படுகிறது.
மதுரையில் ஜனவரி 15 முதல் வரும் 30ஆம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நகரில் ஊர்வலங்கள்,பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது
காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளை நீக்கும் அறிவிப்பை வெளியிடுவதில் மத்திய அரசு தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜல்லிக்கட்டு நடத்த, கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. விலங்குகளை காட்சிப்படுத்த தடை விதிக்கும் பட்டியலில், காளை சேர்க்கப்பட்டதால், இத்தடை ஏற்பட்டது. 'இத்தீர்ப்பை, பரிசீலிக்க வேண்டும்' என, தமிழக அரசு மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம், ஜல்லிக்கட்டு பேரவை ஆகியவை, உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளன. 'பரிசீலனை மனுவை, உடனடியாக விசாரிக்க வேண்டும்' என, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில், அவசர மனு ஒன்று, செவ்வாய்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே, விலங்குகளை காட்சிப்படுத்துவதை தடை செய்யும் பட்டியலில் இருந்து, காளையை நீக்க வேண்டும் என, மத்திய வனத்துறை அமைச்சகத்திடம், தமிழக அரசு வலியுறுத்தியது. இக்கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் அறிவிப்பு, நேற்று வெளியாகும். அதைக் கொண்டு, ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு, உச்ச நீதிமன்றத்தில், இடைக்கால தடை பெறலாம் என, எதிர்பார்த்தனர்.
ஆனால், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கும் விதமாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில், அது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமையும் என்பதாலேயே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தயக்கம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மாற்றும் விதமாக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிப்பது, சட்ட ரீதியாக மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஜல்லிக்கட்டு
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம் (தை 1), பாலமேடு (தை 2), அலங்கா நல்லூர் (தை 3) ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த முடியுமா என்ற குழப்பம் நீடித்து வந்தது. பொங்கலுக்கு முன்தினம் வரை உச்ச நீதிமன்றத்தில் இருந்தோ, அரசிடமிருந்தோ எவ்வித உத்தரவும் கிடைக்காததால் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது.
அவனியாபுரத்தில் கருப்புக்கொடி
தை பொங்கல் முதல் நாளன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். ஆனால் இம்முறை தடை காரணமாக நடக்காததால் நேற்று கறுப்பு சட்டை அணிந்தும், கறுப்பு கொடிகள் ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு அமைப்பினர், கட்சிகள், பொதுமக்கள், காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வாடிவாசலுக்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர். இரண்டு பேர் மொட்டை அடித்துக் கொண்டனர்.
காவல்துறை அலர்ட்
இதையடுத்து இன்று தடையை மீறி அங்கு ஜல்லிக்கட்டு நடப்பதை தடுக்க மதுரை மாநகர காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். வெளியூர்களில் இருந்து அவனியாபுரத்துக்குள் நுழையும் சாலைகளில் 14 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து, ஜல்லிக்கட்டு காளைகளோ, வீரர்களோ அல்லது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களோ மைதானத்துக்குச் சென்று விடாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கருப்புகொடி போராட்டம்
இதனிடையே ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில தினங்களாக உண்ணாவிரதம் நடந்த நிலையில் பொங்கலுக்கு முன்தினம் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.
144 உத்தரவு
இதனிடையே மதுரையில் ஜனவரி 15 முதல் வரும் 30ஆம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நகரில் ஊர்வலங்கள்,பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று மதுரை காவல் துறை ஆணையர் சஞ்சய் மாத்தூர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தடையை மீறி போராட்டம்
இதனிடையே அலங்காநல்லூர், பலமேடு பகுதிகளில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல், கடைவீதி, பிரதான சாலை பகுதிகளில் பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி கட்டி தங்களின் எதிர்பினை பதிவு செய்து வருகின்றனர்.
காலரா அபாயம்
ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் மதுரை மாவட்டத்தில் காலரா நோய் தாக்கும் என்பது அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதி மக்களின் அச்சமாகும். எனவே உச்சநீதிமன்றம் தடையை நீக்கும் பட்சத்தில் அடுத்த ஒருவாரத்திற்குள் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளர்.
போலீஸ் குவிப்பு
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தடையை மீறி தென் மாவட்டங்களிலுள்ள சில கிராமங்களில் இன்றும், நாளையும் பொது இடங்களில் காளைகளை அவிழ்க்க சிலர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து அது போன்ற கிராமங்களின் பட்டியலை காவல்துறையினர் சேகரித்து அங்கும் கண்காணிப்புப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
தடையை மீறினால்
இதன்படி மதுரை மாவட்டத்தில் சேடபட்டி அருகேயுள்ள சின்னக்கட்டளை, உத்தப்ப நாயக்கனூர் அருகேயுள்ள வெள்ளி மலைப்பட்டி, அய்யனார்குளம், மேலூர் அருகேயுள்ள தும்பைப்பட்டி, பதினெட்டாங்குடி, கீழவளவு அருகேயுள்ள தனியா மங்கலம், காடுவெட்டி அருகேயுள்ள குருவித்துறை, கோவில் குருவித்துறை, ஐயப்பநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர வருவாய்த் துறை உதவியுடன், காளை வளர்ப்போரை தொடர்புகொண்டு பொது இடங்களில் அவிழ்க்கக்கூடாது எனவும் வலியுறுத்தி வருகின்றனர். விதிமீறலில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications