ஊருக்குள் டாஸ்மாக் வந்தால் தீக்குளிப்போம் - ஆவேசத்தில் பொதுமக்கள் -வீடியோ
தேசிய நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, அகற்றப்பட்ட 3321 டாஸ்மாக் கடைகளை ஊருக்குள் வைக்க டாஸ்மாக் அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு ஒவ்வொரு ஊரிலும் ப
சென்னை: தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனால், அங்கிருந்து கடைகள் அகற்றப்பட்டு, ஊருக்குள் வைக்கப்படுவதற்கு பெரும்பாலான ஊர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளால் அதிக அளவிலான விபத்துகள் நடக்கின்றன என உச்சநீதிமன்றம், அங்கு இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்கு உத்தரவிட்டது. இதனால் நெடுஞ்சாலைகளில் இருந்த 3321 டாஸ்மாக் கடைகளை அதிகாரிகள் மூடினர்.

ஆனால் அந்தக் கடைகளை ஒவ்வொரு ஊரில் வைப்பதற்கு டாஸ்மாக் அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அனைத்து ஊர்களிலும் பொதுமக்கள், எங்கள் ஊருக்கு டாஸ்மாக் வேண்டாம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் டாஸ்மாக் அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
3321 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், அரசுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை சரிகட்டுவதற்கான வழியும் தெரியாமல் தமிழக அரசு அல்லாடுகிறது.
இந்நிலையில் மதுரை கல்லுப்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடையை வைக்க அதிகாரிகள் முயன்றபோது, அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை செயல்பட விடாமல் தடுத்துள்ளனர். குறிப்பாக பெண்கள், டாஸ்மாக் கடைகளால் தான் தங்கள் ஊரே அழிவதாகக் குற்றம்சாட்டுகின்றனர். ஊருக்குள் டாஸ்மாக் கொண்டு வந்தால் தீக்குளிப்போம் என ஆவேசமாகக் கூறுகின்றனர். அதேபோல் கோவை உக்கடம் பகுதியிலும் கடைகளை வைக்க விடாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications