கொசஸ்தலை ஆற்றில் உடைப்பு - திருவள்ளூர், மீஞ்சூர், மணலி புதுநகர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருவள்ளூர்: சென்னையில் கொட்டித் தீர்த்த மழை வெள்ளத்தால் கொசஸ்தலை ஆற்றில் உடைப்பு ஏற்பட்டதால் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர், மணலி புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கிட்டதட்ட 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடுப்பளவு வரை மழை நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைநீர் தேங்கியிருப்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் திருமண மண்டபங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதுவரை மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரணப் பணிகளில் 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும், வட்டாட்சியர்கள் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications