லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: பொன் ராதாகிருஷ்ணன்
தென்காசி: காமன் வெல்த் மாநாட்டில் கலந்துக் கொண்ட மத்திய அரசுக்கு வரும் லோக்சபா தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் பாரதிய ஜனதாக்கட்சியின் மாநில மகளிர் அணி சார்பில் செயற்குழுக்கூட்டம் நடைப்பெற்றது.

இக் கூட்டத்தில் மாநில தலைவர்பொன் ராதா கிருஷ்ணன் கலந்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
இலங்கையில் நடைப்பெறும் காமன் வெல்த் மாநாட்டில் கனடா கலந்துக் கொள்ளாதது குறித்து இங்கிலாந்து பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். அதோடு இந்திய பிரதமர் கலந்துக் கொள்ளாதது குறித்தும் வர்ணித்துள்ளார். அவர் கூறிய கருத்தின் அடிப்படையில் இலங்கையில் நடைப்பெற்ற மனித உரிமைமீறலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய பிரதமர் கலந்துக்கொள்ளவில்லை,கனடா,கலந்துக்கொள்ளவில்லை,என்றும் அவர் சொல்லியுள்ளார்.
இந்திய பிரதமர் மன்மோகன்சிங் ஏன் காமன் வெல்த் மாநாட்டில் கலந்துக் கொள்ளவில்லை என்ற காரணத்தை இதுவரையில் வெளியிடவில்லை.இலங்கை அதிபர் ராஜபக்சே இந்திய பிரதமர் ஏன் கலந்துக் கொள்ளவில்லை என்ற காரணத்தை சொல்லும் போது அவர்தனக்கு எழுதிய கடிதத்தில் மனித உரிமை மீறல் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று கூறியுள்ளார். ஆகவே தேவையற்ற வகையில் இந்திய பிரதமரை ஒரு பொய்யராக ராஜபக்சே காட்டிவிட்டாரோ என்ற பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையான காரணத்தை இந்திய பிரதமர் அறிவிக்க வேண்டும்.இங்கிலாந்து பிரதமர் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளும் போது அங்கு நடைப் பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து கேள்வி எழுப்புவதாகவும்,வடக்கு மாகாணத்தில் சென்று அங்கு வாழும் மக்களை சந்தித்து குறைகளை கேட்பதாகவும் தெரிவித்துள்ளார். அவருக்கு நமது பாரட்டுக்கள்.
தமிழக மக்களின் எதிர்ப்புக்களை மீறி காமன் வெல்த் மாநாட்டிற்கு சென்ற காங்கிரஸ் கட்சிக்கும்,அதனோடு கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கும் வரும் லோக்சபா தேர்தலில் தமிழக மக்கள் சரியானத் தீர்ப்பினை வழங்குவார்கள் என்றார்.
மீளும் பாரதிய ஜனதா கட்சிக்கு வலு சேர்க்கும் வண்ணம் டிசம்பர் 1ம் தேதிமுதல் 12678தமிழக கிராமங்களில் வீடுத்தோரும் மோடி,இல்லம் தோறும் தாமரை பிரசாரபயணம் தொடங்குகிறது.இதில் 12678 பேர் பங்கேற்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications