ஜெ.க்குதான் ஓட்டு.. எடப்பாடி பழனிச்சாமியை யார் என்றே மக்களுக்கு தெரியாது: டி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கு
மக்கள் அதிமுக என்ற கட்சிக்காக வாக்களிக்கவில்லை. தேர்தல் நடைபெற்ற நேரத்தில் இப்போது முதல்வராக அமர்ந்திருக்கும், எடப்பாடி பழனிச்சாமி யார் என்பதே மக்களுக்கு தெரியாது. என்று, டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
சென்னை: தேர்தல் நடைபெற்றபோது எடப்பாடி பழனிச்சாமியை யார் என்றே மக்களுக்கு தெரியாது என்று திமுக செய்தித்தொடர்பாளரும், ராஜ்யசபா எம்.பியுமான டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு சமயத்தில் திமுகவினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சபைக்கு வெளியே போட்டுவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் முழுக்க இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
தங்கசாலை பகுதியில் நடைபெற்ற உண்ணா விரதத்தில் திமுக செய்தித்தொடர்பாளரும், ராஜ்யசபா எம்.பியுமான திமுக எம்.பியுமான டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், "அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க மக்கள் வாக்களித்து ஜெயலலிதா என்ற ஒரு பிம்பத்திற்காகத்தான்.
மக்கள் அதிமுக என்ற கட்சிக்காக வாக்களிக்கவில்லை. தேர்தல் நடைபெற்ற நேரத்தில் இப்போது முதல்வராக அமர்ந்திருக்கும், எடப்பாடி பழனிச்சாமி யார் என்பதே மக்களுக்கு தெரியாது. எனவே இந்த ஆட்சி மக்கள் ஆதரவு இல்லாத ஆட்சி.
சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை நியாயமானது. ரகசிய வாக்கெடுப்பை நடத்தக் கூடாது என்று சட்டசபையில் எந்த விதிமுறையும் கிடையாது. இவ்வாறு இளங்கோவன் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications