விஜயகாந்த் கல்லூரி மைதானத்தில் இன்று தேமுதிக - ம.ந.கூட்டணி மாநாடு !
சென்னை: சென்னை அடுத்த மாமண்டூரில் உள்ள விஜயகாந்த் குடும்பம் நிர்வகிக்கும் ஆண்டாள்-அழகர் பொறியியல் கல்லூரி வளாகத்தில், இன்று தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. தற்போது இந்த கூட்டணியில் இணைந்துள்ள வாசன் தலைமையிலான தமாகாவும் கலந்து கொள்ள உள்ளது.
மாநாட்டில் போது, கூட்டணி சார்பாக போட்டியிட உள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட உள்ளோம் என்று மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்தார். விஜயகாந்த்தின் தேமுதிக கட்சி, மக்கள் நல கூட்டணி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது.

விஜயகாந்தின் கட்சிகள் தேமுதிக - 104, மதிமுக - 29, தமிழ் மாநில காங்கிரஸ் - 26, விடுதலைச் சிறுத்தைகள் - 25, இந்திய கம்யூனிஸ்ட் - 25, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 25 என்ற வகையில் தொகுதி உடன்பாடு செய்து கொண்டுள்ளன.
இந் நிலையில் இந்த கூட்டணியின் மாநாடு காஞ்சிபுரம் மாவட்டம், மாமண்டூரில் உள்ள ஆண்டாள்-அழகர் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. கூட்டணி உடன்பாடு முடிந்த நிலையில், யாருக்கு எந்த தொகுதி என்பது இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு இம் மாநாட்டில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இம் மாநாட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். தற்போது இக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இணைந்துள்ளதால் அவரும் இக் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications