ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் பெரும் திரளாக மனு.. ஆய்வுக் குழுவினரிடம் கொடுத்தனர்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் அதிக அளவில் மனு கொடுத்ததாக அங்கு ஆய்வு செய்ய சென்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியிலான குழு தெரிவித்து இருக்கிறது.
Recommended Video

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் அதிக அளவில் மனு கொடுத்ததாக அங்கு ஆய்வு செய்ய சென்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியிலான குழு தெரிவித்து இருக்கிறது.
கடந்த வாரம் ஸ்டெர்லைட்டில் ஆய்வு பணியை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு இன்று அதிகாலை தூத்துக்குடி வந்தது. காலையில் இருந்து மாலை வரை அங்கு இந்த குழு ஆய்வு செய்தது.

ஆய்வு பணி
இந்த குழு 6 வாரத்திற்குள் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது. இதற்காக மூன்று பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேகலாயா மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியான தருண் அகர்வால் தலைமையில் இந்த குழு இயங்குகிறது. மத்திய அரசின் பசுமை விஞ்ஞானி சதீஷ் மற்றும் வரலட்சுமி ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.

கழிவுகளை சோதனை
இந்த நிலையில் முதலில் தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் கொட்டப்படும் இடத்தை சோதனை செய்தது ஆய்வு குழு. எந்த பகுதியில் எல்லாம் கழிவுகள் கலக்கிறதோ அங்கு எல்லாம் சோதனை நடந்தது. அதேபோல் இந்த கழிவுகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வேதியியல் சோதனைக்காக அனுப்பப்பட உள்ளது.

ஆலையை சோதனை
அதன்பின் ஆலைக்கும் சென்றும் ஆய்வு குழு சோதனை செய்தது. ஆலைக்குள் மட்டும் ஆய்வு குழு இரண்டு மணி நேரம் சோதனை செய்தது. உள்ளே இருக்கும் காப்பர் பொருட்களை சோதனை செய்தனர். அங்கு இருக்கும் குடோனிலும் சோதனை செய்தனர்.

மக்கள் கருத்து கேட்பு
அதன்பின் மக்கள் கருத்து கேட்கப்பட்டது. இதற்காக மக்கள் காலையில் இருந்தே காத்து இருந்தனர். பெரிய பெரிய பிளக்ஸ் பேனர்களில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு வாசகத்துடன் அவர்கள் காத்து இருந்தனர். அதேபோல் இந்த ஆய்வு குழுவிடம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தனர்.

என்ன கூறினார்கள்
இது குறித்து ஆய்வு குழு தலைவர் தருண் அகர்வால் ''தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது என்று பொதுமக்கள் மனு அளித்தனர். மக்கள் இதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நிறைய பேர் மனு கொடுத்துள்ளனர்'' என்று கூறினார்.

சென்னையில் குழு
இந்த நிலையில் நாளை இதே குழு சென்னையில் இதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்க உள்ளது. சில அதிகாரிகளிடமும் இதுகுறித்து கருத்து கேட்டுள்ளனர். இன்று தூத்துக்குடி ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தியதையும், ஆய்வு செய்ததையும் வைத்து நாளை முக்கிய கூட்டம் ஒன்றும் நடத்த உள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications