பெப்சி நிறுவன தலைவர் இந்திரா நூயியின் சென்னை வீட்டில் கொள்ளை
சென்னை: பெப்சி நிறுவன தலைவர் இந்திரா நூயியின் சென்னை வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
பெப்சி நிறுவன தலைவர் இந்திரா நூயியிக்கு சென்னை ஜி.என். செட்டி சாலையில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் அவரின் அம்மா வசித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். அவர் அமெரிக்கா கிளம்பும் முன்பு வீட்டை பாதுகாக்குமாறு சூர்யா செக்யூரிடீஸ் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னை வந்த நூயி நேற்று தனது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. காவலாளியைக் காணவில்லை. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ மற்றும் கப்போர்டுகள் திறந்து கிடந்தன. அவற்றில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருந்தன.
இதையடுத்து நூயியின் மேனேஜர் ஸ்ரீலேகா இது குறித்து பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். திருடுபோன பொருட்களின் மதிப்பை நூயியின் அம்மா தான் கூற வேண்டும் என்று அவர் புகாரில் தெரிவித்திருந்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications