பெரம்பலூரில் நடைபெற்ற எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க கூட்டம்!
பெரம்பலூர்: பெரம்பலுரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டக்கிளையின் சிறப்புக் கூட்டம் 28ஆம் தேதி மதரஸா ரோடு ரெட்டியார் அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ஜெ.சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ஆ.இராமர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
"உன்னையறிந்தால்" மாணவர் கல்வி மேம்பாட்டு மைய பொறுப்பாளர் பொறியாளர் கி.கலைநாதன், தேவன்பு, முனைவர் தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்விற்கு "காக்கைச் சிறகினிலே" இணையாசிரியர் எழுத்தாளர் இரா.எட்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். இவரது உரை புதிய எழுத்தாளர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.
முன்னதாக கவிஞர்கள் பங்குபெற்ற கவியரங்கம் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்ட கவிஞர்கள் சக்கரபாணி, சுரேஷகுமார் அன்புச் செல்வன், கணேசன், செயராமன், தெய்வீகன், ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் தங்கள் கவிதையை வாசித்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியாக சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அகவி நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியை பேராசிரியர். ப.செல்வக்குமார் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரும்பாவூர் தாஹிர் பாஷா, எழுத்தாளர்கள். தயாளன், அசன் முஹம்மது, பாலை செல்வம்., பொன்னொளியனார், வி.களத்தூர் கமால் பாஷா உள்பட பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications