20 வயதில் போய் 46 வயதில் வெளியே வருகிறார் பேரறிவாளன்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் தற்போது பரோலில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து வெளியே வருகிறார்.
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 20 வயதில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் 46 வயதில் தற்போது பரோலில் வருகிறார்.
கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கருணை அடிப்படையில் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் இவர்கள் 7 பேரும் தண்டனை காலம் முடிந்தும் 26 ஆண்டுகளாக சிறையிலேயே விடுவிக்கப்படாமல் உள்ளனர். அவர்களை விடுவிக்க தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கு மத்திய அரசு மத்திய அரசு பதிலளிக்காவிட்டால் தமிழக அரசே அவர்களை விடுதலை செய்யும் என்றும் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
ஆனால் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. இந்நிலையில் பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு உடல்நல குறைப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மகனை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்தார். எனினும் அவருக்கு பரோல் வழங்கவில்லை.
இந்நிலையில் தற்போது பேரறிவாளனுக்கு ஒரு மாதத்துக்கு விடுப்பு பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 20 வயதில் சிறைக்கு சென்ற பேரறிவாளன் 26 ஆண்டுகள் கழித்து 46 வயதில் வெளியே அதுவும் பரோலில் வந்திருக்கிறார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications