பொங்கலுக்கு முன்பு பேரறிவாளனை விடுதலை செய்ய தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள்
சென்னை: பொங்கலுக்கு முன்னதாக பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி அவரது தாயார் அற்புதம் அம்மாள் முதல்வர் அலுவலக தனிப்பிரிவில் இன்று மனு அளித்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் அளித்த கருணை மனு மீது குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்க தாமதமானதால் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் அவர்களை விடுவிப்பதாக தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என தீர்ப்பளித்தது.
இந்நிலையில், அரசியல் சாசனத்தின் 161வின் படி தனது மகனை விடுதலை செய்யுமாறு பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் இன்று முதல்வர் தனிப் பிரிவில் மனு அளித்தார்.
அந்த மனுவில் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த அதிகாரி தியாகராஜன், பேரறிவாளனின் வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்ததாக கூறியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
பேரறிவாளனின் நன்னடத்தையை கணக்கில் கொண்டும், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் பொங்கலுக்கு முன்பாக அவரை விடுவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications