வயதான காலத்திலாவது என் மகன் என்னுடன் இருக்க வேண்டும்- பேரறிவாளன் தாயார்

தூத்துக்குடியில் மரணதண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினரின் உயிர்வலி சக்தி அளிக்கும் சத்தம் என்ற ஆவணப்படம் வெளியீடு நடைபெற்றது. இதில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கலந்து கொண்டார்.
மரணத்தண்டனை எப்படி தரப்படுகிறது, அதில் உள்ள சூழ்ச்சி என்ன? என்பது குறித்து விளக்கும் வகையில் நடைபெற்ற ஆவணப்பட வெளீயிட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், நாம் தமிழர் இயக்கம், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிழ்ச்சியில் அற்புதம்மாள் பேசுகையில், சிபிஐ அதிகாரி என்னுடைய மகன் பேரறிவாளன் குறித்து உண்மைகளை வெளிப்படுத்திய போதும், எனது மகனின் விடுதலை தள்ளிபோய்கொண்டே இருப்பது வேதனையை அளிக்கிறது.
மரணதண்டனை குறித்து சாமானிய மக்களிடையே தற்போது மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி வருகிறது. 23 ஆண்டுகளை சிறையில் தொலைத்த பேரறிவாளன் தற்போதாவது சுதந்திர காற்றை சுவாசிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications