வங்கக் கடலோரம் துயிலப் போய்விட்டாரே: ஜெயலலிதா மறைவுக்கு பேரறிவாளன் கண்ணீர் கடிதம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு தம்மை துயரக்கடலில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டதாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் கைகளால் விடுதலை பெற்று எனது அன்னையோடு சென்று நேரில் நன்றி கூறி மகிழ வேண்டும் என்ற பெருங்கனவோடு காத்திருந்த நான் கடற்கரை மணல் பரப்பில் கல்லறையில் துயிலும் அவரை எங்ஙகனம் எதிர்கொள்ளப் போகிறேன் என்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு கண்ணீர் மல்க கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அவர் எழுதியுள்ள கண்ணீர் கடிதம்:
அழாதீர்கள் அம்மா... உங்கள் மகன்தான் உங்களுடன் சேரப்போகீராறே என்று எனை ஈன்றவள் கரம் பற்றி கலங்காதீர்கள் அம்மா என ஒரு தாயின் பரிவோடு எனது தாயிடம் உரைத்து கண்ணீரை துடைத்து விட்ட அம்மா இப்போது வங்கக் கடலோரம் துயிலப் போய் விட்டார்.

23 ஆண்டுகால தன்னலம் கருதா தியாகத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட தருணமாக அது இருந்தது. 2011ஆம் ஆண்டு மூவர் உயிர்காக்க இயற்றப்பட்ட சட்டப்பேரவை தீர்மானத்திலும், 2014இல் ஏழு பேரின் விடுதலை தீர்மானத்திலும் அவர் கையாண்ட " திருவாளர்கள்" என்ற சொல்லின் ஆழமும், அது சொல்லி சென்ற கதைகளும் ஏராளம். கொலைகாரன் என்று குத்தி கிழித்திட்ட கொடூரத்தில் இருந்து மீட்டு மருந்திட்ட மரியாதைக்குரிய சொல் அது.
வங்கக் கடலோரம் துயிலப் போய்விட்டாரே: ஜெயலலிதா மறைவுக்கு பேரறிவாளன் கண்ணீர் கடிதம் pic.twitter.com/7BWlpifRvT
— Oneindia Tamil (@thatsTamil) December 16, 2016
மூவர் தூக்கு, எழுவர் விடுதலை மட்டுமல்லாமல் ஈழ விடுதலை,காவிரி விவகாரம், முல்லை பெரியாறு நீர் பங்கீடு என மக்கள் சார்ந்த பிரச்னைகளில் அவர் போராடிய விதம் எவருக்கும் வாய்த்திராத வரம். சாமானிய மக்களுக்காகவே வாழ்ந்து, மக்களுக்காகவே செயலாற்றி, மக்கள் பணியிலேயே உயிர் துறந்துள்ளார் ஜெயலலிதா.
அவரது கைகளால் விடுதலை பெற்று எனது அன்னையோடு சென்று நேரில் நன்றி கூறி மகிழ வேண்டும் என்ற பெருங்கனவோடு காத்திருந்த நான் கடற்கரை மணல் பரப்பில் கல்லறையில் துயிலும் அவரை எங்ஙகனம் எதிர்கொள்ளப் போகிறேன என்று பேரறிவாளன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக்கு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்ததுமட்டுமல்லாமல் சட்டப் போராட்டமும் நடத்தி வந்தார் ஜெயலலிதா. இந்நிலையில் அவரது மறைவு பேரறிவாளனுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications