'எங்க எம்எல்ஏ அருண்பாண்டியனைக் காணோம்.. கண்டுபிடிச்சா பரிசு பத்தாயிரம் ரூபாய்!'
'எங்க எம்எல்ஏ அருண்பாண்டியனைக் காணோம்.. கண்டுபிடிச்சா பரிசு பத்தாயிரம் ரூபாய்!'
அருண்பாண்டியன்...
விசுவால் அறிமுகப்படுத்தப்பட்டு விஜயகாந்தால் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடித்தவர். நெல்லை மாவட்டம் இலஞ்சியைச் சேர்ந்தவர். பின்னர் சினிமா விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் மாறினார். அய்ங்கரன் நிறுவனத்தில் பார்ட்னராக இருந்து பின் விலகி, தனியாக நிறுவனம் தொடங்கிவிட்டார்.

ஆரம்பத்தில் விஜயகாந்தின் தேமுதிகவில் இணைந்து, பேராவூரணி தொகுதியில் அதே கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அடுத்த ஆண்டே சடாரென்று அதிமுக பக்கம் சாய்ந்துவிட்டார்.
பேராவூரணி தேர்தல் பிரசாரத்தின் போது நான் வெற்றி பெற்றால் பேராவூரணியில் வீடு எடுத்து தங்கி, அங்கிருந்தபடி மக்கள் பணி ஆற்றுவேன் என அருண்பாண்டியன் கூறினார்.
வெளியூர் வேட்பாளர் என்றாலும் அ.தி.மு.க. வினர் தீவிரமாக பணியாற்றி அருண் பாண்டியனை வெற்றி பெற வைத்தனர்.
இந்த நிலையில் இவர் தொகுதி பக்கம் தலையே காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 4 ஆண்டுகளில் இவர் சுமார் ஏழு முறை மட்டுமே தொகுதியில் தலை காட்டியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தொகுதியில் நிலவும் பிரச்சினை குறித்து முறையிட அவரது எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு சென்றால் உங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி தாருங்கள். நாங்கள் ஆன் லைனில் அனுப்பி விடுகிறோம் என்கிறார்களாம் அருண்பாண்டியன் ஆட்கள்.
நாங்கள் நேரில் பார்க்க முடியாத எம்.எல்.ஏ. எதற்கு என்ற முடிவுக்கு வந்துவிட்ட பேராவூரணி வாலிபர்கள், ஒரு வேலையில் இறங்கினர்.
இன்றைக்கு அத்தனை பேரையும் அலற வைக்கும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இப்படி ஒரு அறிவிப்பு வைத்துள்ளனர்:
காணாமல் பேனவர் பற்றிய அறிவிப்பு
பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏ. அருண்பாண்டியனை 4 ஆண்டுகளாகக் காணவில்லை.
கண்டு பிடித்து தருபவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு!
இந்தப் பதிவை பலரும் பகிர்ந்ததால், அருண்பாண்டியனுடன் தொடர்பில் இருக்கும் வெளிநாட்டு 'உறவுகள்' அவருக்கு போனில் தகவல் தெரிவிக்க, சங்கடத்தில் நெளிந்தாராம் அருண்பாண்டியன்.
விரைவில் தொகுதிப் பக்கம் ஒரு விசிட் அடித்து, நான்கைந்து நாட்கள் தங்கிவிட்டு வரவும் முடிவு செய்துள்ளாராம்!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications