தந்தை பெரியார் 138வது பிறந்தநாள்: கருணாநிதி, ஜெயலலிதா மரியாதை
சென்னை: சென்னை: தந்தை பெரியாரின் 138வது பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தந்தை பெரியாரின் பிறந்தநாளையையொட்டி அவரது உருவப் படத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதையை செலுத்தினார்.
தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வெ.இராமசாமி கடந்த 1879ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதியன்று ஈரோட்டில் பிறந்தார். ஜாதிய ஒடுக்குமுறைகளை அழிக்கும் சமூக சீர்திருத்ததிற்காவும், மூட நம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும் போராடிய பகுத்தறிவாளர் தந்தை பெரியார்.

சமூக சீர்திருத்தத்துக்காக திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடிய சமூக போராளி. சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னாசியாவின் சாக்ரடீஸ் என்றும் போற்றப்பட்டவர் தந்தை பெரியார்.

இவரது 138வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், அக்கட்சியின் பொருளாளரும், எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் உள்ளிட்டோரும் உடன் சென்று மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் 138வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில், தந்தை பெரியாரின் படத்திற்கு முதல்வர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்தினார். அண்ணா பிறந்தநாளில் அண்ணாசலையில் உள்ள சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவிக்க வந்த போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை தவிர்க்கவே இன்று போயஸ் தோட்டத்தில் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் ஜெயலலிதா.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்.பி.க்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications